Sunday, July 14, 2013


                         இந்தோனேசியாவில் கிடைத்துள்ள பல்லவ அரசன் 
                         பூர்ணவர்மன் பாதச் சுவடு கொண்ட கல்வெட்டு
 
          இதே இந்தோனேசியாவில் முதற்சங்கத்து பாண்டிய மாவேந்தர் வடிம்பலம்ப நின்ற பாண்டியன் நெடியோன் அவர்களின் பாதச் சுவடு பதிக்கப்பட்ட இடம் சாவகத்தில் இருந்து என்று சங்க இலக்கியம் கூறுகின்றது. அதனைக் கடல்நீர் வந்து அலம்பித் திரும்பும் நிலையில் கடற்கரையில் அமைத்திருந்தனர். அதன்மீது வந்து அலம்பித் திரும்பும் நீருக்கு வடிம்பு என்பது தூய பழந்தமிழப் பெயராகும்.

      அதுவும் மேற்காணும் பூர்ணவர்மன் பாதச் சுவடு பதிக்கப்பட்ட கல்வெட்டு கொண்ட பாறையைப் போன்ற ஒன்றாகத்தான் இருந்திருக்க வேண்டும். இவ்வாறு, அரசர்கள் தமது ஆளுகைக்கு அடிப்படுத்திக் கொண்ட இடங்களில் நாடுகளில் தமது ஆட்சிக்கு அறிகுறியாக இது போன்ற பாதச் சவடுகளைப் பதிப்பது தொன்று தொட்ட வழக்கமாக இருந்து வந்துள்ளது.

      பல்லவன் பாதச் சுவடு கிடைத்ததைப் போலப் பாண்டியர் பாதச் சுவடும் கிடைத்திடுமாயின் நம் மகிழ்ச்சிக்கு ஓர் எல்லையும் உண்டோ? தமிழர் வரலாற்றின் மாட்சிக்கு அதுவே ஒப்பற்றதொரு மகுடம் போலாகும்.






No comments:

Post a Comment