தரமார்ந்த
தமிழ்க்கல்விக்குச்
சில வழிமுறைகள்
எழுத்து நிலை:
1.
அடிப்படை
எழுத்து (முதல்) 30
-
உயிர் 12,
மெய் 18
2.
சார்பு
எழுத்து 3
-
குற்றியல்
உகரம், குற்றியல் இகரம், ஆய்தம்
3.
கூட்டெழுத்து(உயிர்மெய்) 216
-
க-கெள முதல்
ன-னெள வரை
துணைக்குறியீடுகள் சேர்ப்பு:
•
1. ¸¡ø:-
¸¡,
Á¡, »¡...
[ ‘¬’¸¡Ã ¦¿Êø ÌÈ¢ ]
•
2. ¦¸¡õÒ측ø:-
¦º¡,
¦Á¡, ¦¾¡...
[ ‘´’¸Ãì ÌÈ¢ø ÌÈ¢ ]
[ ‘ஓ’¸¡Ã
¦¿Êø ÌÈ¢ ]
[ ¦ - ´ü¨È즸¡õÒ,
§
- þÃð¨¼ì ¦¸¡õÒ ]
¦É¡,
§É¡, ¦È¡, §½¡
•
3. ¸£üȨÃ측ø:-
Ð,
Ñ...
[ ‘¯’¸Ãì ÌÈ¢ø ÌÈ¢ ]
•
4. ¸£üÚ측ø:-
à, á..........
[ ‘°’¸¡Ã ¦¿Êø ÌÈ¢ ]
•
5. ÒûǢ측ø:-
°,
¶, ¦¸ª, ¦ºª - Ç
[‘°-¶’¸¡Ã ¦¿Êø ÌÈ¢]
•
6. ¦¸¡õÒ:-
எ, ஏ
[ ‘எ’கரக் குறில் -
ஒற்றைக்கொம்பு]
[ ‘ஏ’கார நெடில் -
இரட்டைக்கொம்பு]
ÌÈ¢ôÒ : À¨ÆÂ
±ØòРӨȢø, ½¡, ¦½¡, §½¡, É¡, ¦É¡, §É¡, ¦È¡, §È¡, ... §À¡ýÈ ±ØòиǢý þ¼ô
Àì¸Á¡¸ §¿¡ì¸¢Â¨Áó¾ À¢¨È¿¢Ä× §À¡ýÈ ¸£úŨÇ×¼ý ÜÊ ÅÊ× ¦¸¡õÒôÀ¢¨È ±ÉôÀð¼Ð. þÐ þô§À¡Ð ÅÆ츢Ģø¨Ä.
•
7. À̾¢ì¸¡üÀ¢¨È
:-
â,
ç, ä
[ þÅüÈ¢ý ¸£úôÒÈòРŨÇ× - À¢¨È ]
- 8. ¸£úÅ¢ÄíÌ :-
Ì,
Ý, ã, Ù, é .........
[
‘ ¯ - ° ’ ì¸Ç¢ý ÌÈ¢ ]
- 9. §ÁøÅ¢ÄíÌ :-
¸¢ -
¸£, Á¢ - Á£, ¾¢ - ¾£,
[
‘ þ - ® ’ì¸Ç¢ý ÌÈ¢( ¢
- £ )
- 10. ÀÎ쨸î ÍÆ¢/ þÃð¨¼îÍÆ¢ :-
¨¸,
¨Á, ¨Å, ¨Â, ¨Ä
[ ‘ ³ ’¸¡Ãì ÌÈ¢
(¨) ]
எழுத்து வரலாறு:
தமிழ் எழுத்துமுறை அடைந்து வந்துள்ள காலப்படியான
வளர்சிதை மாற்றங்களைக் குறித்த வரலாறு கற்பிக்கப்பட வேண்டும். சிந்துவெளி முதல்
இன்றுவரை பல மாற்றங்கள் நடைபெற்றுள்ளன.
படவெழுத்து, அசையெழுத்து, ஒலியெழுத்து, ...
என்றும் தமிழி, வட்டெழுத்து, ... என்றும் பிற இந்திய மொழிகளுக்கெல்லாம் அடிப்படை
அமைத்துக்கொடுத்துள்ள வரலாற்றினையும் விளக்கப்படுத்த வேண்டும்.
செம்மொழித் துகுதிப்பாடுகள்:
செம்மொழித் தகுதிப்பாடுகள் விளக்கப்பட
வேண்டும். அதனோடுதமிழின் பத்தாயிரம் ஆண்டுக்குக்குக் குறையாத வரலாற்றினைத் தமிழக அரசு
வெளியிட்டுள்ள செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் பேரகரமுதலியின் வாயிலாக
அறிக்கப்படவேண்டும்.
உச்சரிப்புப் பயிற்சி:
- கைநொடிப்புடன்
அதற்கேற்ப உச்சரித்தல்.
- மாத்திரையைச்
செய்முறையில் அறிதல் – அறிந்து கூறுதல்.
- தாளக் கருவிகளைப்
பயன்படுத்தலாம்.
-
ஆசிரியர் உடன்
-
நண்பர் உடன்
-
நிலையப்
பயிற்சி (Station)
முதல் – இடை – இறுதி
எழுத்துகள் சொற்களில் அமைந்துவரும்
இடநிலையைக் குறிப்பிட்டுக் கற்பிக்க வேண்டும். சொல்லுக்கு முதலில் வரும்
எழுத்துகள் – மொழிமுதல் எழுத்துகள் எனப்படும். சொல்லுக்கு இடையில் வரும்
எழுத்துகள் – சொல்லிடை எழுத்துகள் எனப்படும். சொல்லுக்குக் கடைசியில் வரும்
எழுத்துகள் சொற்கடை எழுத்துகள் எனப்படும்.
எழுத்துக்குரிய இடத்தைக் குறிப்பிட்டுக்
கற்பிக்க வேண்டும். தமிழ்மொழிக்கு அயலான மொழிகளின் அடிப்படைகளைத் தமிழ்மொழிக்குள்
புகுத்திக்காட்டக் கூடாது.
குற்றியலுகரப் பயிற்சி
வல்லின உகரங்களாகிய கு,சு,டு,துபு,று என்பவற்றைச் சார்ந்து
தோன்றுவது குற்றியல் உகரம். இதனை மிகமிகப் பரவலான நிலையில் அன்றாட வழக்கத்தில்
பயன்படுத்துகின்றோம்.
இரண்டுமே குறில் எழுத்துகளாக வரும், படு, புது, நறு, பசு, நகு...
போன்ற இணைக்குறில் அமைப்புடைய சொற்களைத் தவிர்த்து மற்ற வகையான வீடு, பூட்டு,
காசு, கற்று, பத்து, காப்பு, பேச்சு, சார்பு, அழகு, ... போன்ற வல்லின உகரத்தில்
முடிகின்ற சொற்களெல்லாம் குற்றியலுகரம் எனப்படும்.
இவற்றைப் பட்டியல், இணை, குழு முதலியவற்றிலிருந்து மாணவர்கள்
வேறபிரித்து அறிதல் – கூறுதல் – எழுதுதல் ஒரு தனிப் பயிற்சியாக வேண்டும். ஏனெனில்,
இது புணரியல் அறிவுக்கு மிக இன்றியமையாத அடிப்படையாக உள்ளது.
குற்றியலிகரப் பயிற்சி
குற்றியல் உகரத்தில் முடிகின்ற சொல் யகர வரிசைச் சொற்களுடன்
சேரும்போது உகர வடிவம் இகர வடிவமாகிறது.
எ-டு : களிறு + யானை >
களிற்றியானை
செங்கோடு + யாழ் > செங்கோட்டியாழ்
குற்றியல் உகரத்தில்
போலவே ர், ரு, வ், வு, என்ற எழுத்துகளில் முடிகின்ற சொற்களும் குற்றியலிகரம்
ஆகும்.
பெரு + யாறு > பெரியாறு
பெரு + யாழ் > பேரியாழ்
ஒப்பார் + யாம் கண்டதில்லை > ஒப்பாரி யாங் கண்டதில்லை.
இதனை இடைநிலையிலும்
உயர்நிலையிலும் கற்பிக்கலாம்.
ஒலிப்பெயர்கள்
விரிவான
பட்டியல் தரப்படுதல் வேண்டும். ஆங்கிலப் பாடத்தில் விரிவாக இருக்கிறது. தமிழில்
வகுப்பு நிலைக்கேற்ப அவை வகைப்படுத்தப்பட வேண்டும்.
முழு அட்டவணைச்
சேர்ப்புத் தேவை.
ஆந்தை அலறும் கோட்டான் இரட்டும் கூகை கூவும்
ஆ மிலைக்கும் காளை முக்காரமிடும் மயில் அகவும்
யானை பிளிறும் அரிமா உரறும் புலி உறுமும்
பால் பெயர்கள் – மகவுப் பெயர்கள்
ஆண் பெண் மகவு
அரியேறு அரிப்பிணா அரிக்குருளை அரி-அரிமா(சிங்கம்)
மானேறு மான்பிணை மான்கன்று
அன்னச்சேவல் அன்னப்பெடை அன்னப்பார்ப்பு
சொல் வகை
பெயர்ச்சொல் – அறிமுக முறையை எளிமையாக்கல்.
பருமைநிலை,
நுண்மைநிலையில் உள்ள பொருள்களின் பெயர்கள் – பொருள்பெயர்
பொருள்களின்
பகுதிகளைக் குறிக்கும் பெயர்ச்சொற்கள் – சினைப்பெயர்
பொருள்
இருக்கும் இடங்களைக் குறிக்கும் பெயர்ச்சொற்கள் – இடப்பெயர்
பொருள்களுக்கு
இருக்கும் தன்மைகளைக் குறிக்கும் பெயர்ச்சொற்கள் – பண்புப்பெயர்
பொருள்கள் இயங்குதல்களைக்
குறிக்கும் பெயர்ச்சொற்கள் – தொழிற்பெயர்
பொருள்கள் இயங்குதல்களைச்
சார்ந்த காலப்பெயர்கள் – காலப்பெயர்
இவ்வாறு நிரல்நிரலாகத் தொடர்புகாட்டிக் கற்பிக்க வேண்டும்.
பால்பகா அஃறிணை
ஆண்
எனவோ, பெண் எனவோ பால்பகுக்க முடியாத அஃறிணைப் பெயர்கள், பால்பகுக்க முடிந்தாலும்
அவ்வாறு பகுத்தில்லாத நிலையிலுள்ள அஃறிணை சார்ந்த பொதுப்பெயர்களில் எண்நிலை –
எண்ணிக்கை நிலை பற்றி அறியச்செய்தல். ஒருசார் உயர்திணையிலும் பால் பகுக்காத
பொதுநிலையில் கூறப்படும் பெயர்ச்சொற்களும் இதில் அடங்கும்.
-
எண் அல்லது எண்ணிக்கை துல்லியமாக இருந்தால் கள் விகுதி சேர்க்கத்
தேவையில்லை.
எ-டு: நூறு தேங்காய், இரண்டு புத்தகம், இருபது யானை, மூன்று
குழந்தை.
-
எங்கே எண்ணிக்கை நிலை துல்லியமாக இல்லையோ அங்கே பன்மையைக் குறிக்க
‘கள்’ விகுதி வரும்.
எ-டு: புலிகள்,
பூனைகள், கடைகள், வீடுகள், மரங்கள், பிள்ளைகள், மருத்துவர்கள், மலர்கள், ...
-
திருத்தமான நடை
பேச்சு
நடை, எழுத்து நடை இரண்டுமே திருத்தமான நிலையில் அமையவேண்டும். இடைநிலையிலும்,
உயர்நிலையிலும் ஆய்வு நோக்கில், ஒப்பீட்டு நோக்கில் திருத்தமில்லா நடைக்கும்
திருத்தமான நடைக்கும் ஒற்றுமைவேற்றுமை காணலாம் – காட்டலாம்.
இலக்கியம் என்ற பெயரில் ஒழுக்க மாறுபாடான –
சமய மாறுபாடான நடைகளும் கருத்துகளும் காட்சிகளும் இடம்பெறுவதல் கூடாது. இன்புறுதலும்
பண்புறுதலும் சேர்ந்தே நடக்கவேண்டும்.
இரண்டில் ஒன்று இல்லையானாலும் ஒழுக்கக் கேடும் உணர்வுக் கேடும்
நிகழ்ந்துவிடும். அதனால், வாழ்வியல் நெறியில் பிடிப்பு விட்டுப்போகத்தான்
செய்யும்.
திருத்தமில்லா நடை தொடக்கப் பள்ளிநிலையில் தவிர்க்கப்படுவதே நலம்
தரும். அடிப்படையான முதலில் எதற்குக் கோணல்.
No comments:
Post a Comment