அறுமுடிபுò
தெளிபொருள் விளக்கம்
தமிழ்முனிவர் திரு. வி. கலியாணசுந்தரனார்
அவர்கள் கொடுத்துள்ள விளக்கம் அறுமுடிபு பற்றிய
தெளிவான பொதுநிலை விளக்கமாகவும் ஆழ்நிலை விளக்கமாகவும் இருக்கிறது. அதனை வருமாறு
காண்க:
யோகாந்தம்:- ‘யோகம்’ என்றால் ஒன்றில் உள்ளம் ஒன்றுதல்.
[ஓகமுடிபு] ஒன்றும் பயிற்சி முதிர முதிர அதன்வடிவில்
பலதிற அக நிகழ்வுகள் தோன்றி; யோகமுடிவில் ‘கலை’ விளங்கும்.
கலாந்தம்:- ‘கலை’ என்பது ஒரு
தத்துவம். இÐ, ஆன்மாவின் ஆணவ
[கலைமுடிபு] மறைப்பைச் சிறிதுசிறிதாக நீக்கி அறிவு
விளக்கத்தை உண்டாக்கும். கலைமுடிவில் ‘நாதம்’ தோன்றும்.
நாதாந்தம்:- ‘நாதம்’ என்றால்
ஒலி. எல்லா ஒலிகளுக்கும்
[நாத முடிபு] மூலமாயிருக்கும் ஓங்காரத்துள் சிவம் நாதமாயிருப்பது விளங்கும். நாதமுடிவைத் தொடர்ந்து ‘போதம்’ நிற்கும்.
போதாந்தம்:- ‘போதம்’ என்பது மெய்யறிவு. ஆன்மாவிற்கு ஆணவ நீக்கமும்
[உணர்வு
முடிபு] அறிவு
விளக்கமும் கலை என்னும் தத்துவம் ஏற்படுத்தினாலும், ஆணவவேர் நாதத்துக்கும்
போதத்துக்கும் இடையிலேயே அறுபடும். அது அறுபட்டபின்னரே, போத நிலையில் சிவம் சோதி வடிவாகப் பொலிவுற்று
ஆன்மாவிற்கு இன்ப உணர்வு பெருகும்; ‘வேதம்’ விளங்கும்.
வேதாந்தம்:- போதத்தில் ஓரிடத்தே திரண்டு பொலிவுற்ற சிவசோதி,
[மறைமுடிபு] வேதாந்தத்தில்
எங்கும் ஒளிமயமாய் விளங்கும்.
சித்தாந்தம்:- சித்தாந்தத்தில் யாண்டும் நீக்கமற்று
நிறைந்தொளிரும்
[செந்துணிபு] அருட்பெருஞ்சோதியைத் ‘தான் அஃது’ என்னும்
இரண்டற
உணரும் தத்துவநிலை உண்டாகும்.
அறுமுடிபு
அமைபுச் செந்நெறி
[‘ஷடாந்த
சமரச சுத்தசன்மார்க்கம்’]
இந்த
ஆறந்தங்களுக்கும் இடையே கலந்துநின்று அவற்றுக்கும்
மேலான ¦À¡Ðமை (ºÁú) நிலையில்
விளங்குவதுதான் ‘ஷடாந்த சமரச சுத்தசன்மார்க்கம்’ என்று வள்ளல்பெருமான்
விளக்கப்படுத்துகின்றார். அறுமுடிபு
என்பது ‘ஷடாந்தம்’; அமைபு
என்பது ‘சமரசம்’; செந்நெறி
என்பது ‘சுத்தசன்மார்க்கம்’. எனவே, ‘ஷடாந்த சமரச சுத்தசன்மார்க்கம்’
என்பது நல்ல தமிழில் ‘அறுமுடிபு
அமைபுச் செந்நெறி’ என்று கூறப்படுகிறது.
மேலும், ஆர்ப்பரிப்பும் அலைக்கழிப்பும்
அடங்கிய நிலையில்தானே அமைபு
வரும். அமைபு பெற்றவர்களை ‘அமைவர்’ என்று தமிழ்மரபு குறிப்பிடும்.
இதே அமைதல்
என்னும் பொருள்தரும் அமர்தல்
(அடங்குதல்) என்னும் சொல்லின் அடியாகத்
திருக்குறள் அவர்களை ‘அமரர்’
என்று குறிப்பிடும். [ காண்க: பொழுது
அடங்குதல் = பொழுது அமர்தல். பொங்கியெழுந்துநின்ற
கட்டி உள்ளடங்குதல் கட்டி அமர்தல்
எனப்படும்.] ‘நிலையில்
திரியாது அடங்கியான்’ என்று அதற்கு விளக்கமும் அவரே அதே அடக்கமுடைமை
அதிகாரத்திலே அருளிச்செய்திருக்கின்றார். அடக்கம்
அமரருள் உய்க்கும், அடங்காமை ஆரிருள் உய்த்து விடும்.
இனி, வள்ளற்பெருமானார்தம் விளக்கப்படி:
சமரசம்:- எல்லா அந்தங்களினது அந்தமும் தனக்குப்
பூர்வமாகி, தான் உத்தரத்தில் நின்று மருவியது ‘சமரசம்’.
[அதாவது þ¾üÌ முற்பட விளக்கிய ஆறு அந்தங்களும் சமரசத்திற்கு
முந்திய நிலையில் இருப்பவை. ‘ஷடாந்த சமரச சுத்த சன்மார்க்கம்’ என்பது
அவ்வாறுக்கும் பிந்திய நிலையில் தொடர்ந்துவந்து மேற்சென்று அவற்றோடு
மருவிநிற்பது.]
சுத்தம்:- ‘சுத்தம்’ என்பது ஒன்றுமல்லாதது.
இது சன்மார்க்கம் எனும் சொல்லுக்குப் பூர்வம்
(முன்) வந்ததால் மேற்குறித்த சமய மதானுபவங்களைக் கடந்தது.
[அதாவது, சமயமத அனுபவங்களைக் கடந்த அனுபவம் சன்மார்க்க அனுபவம்.]
சுத்த
சமரசம்:- விந்து, பரவிந்து
இரண்டையும் மறுக்கச் ‘சுத்தவிந்து’ வந்தது போலும், சிவம், பரசிவம்
இரண்டையும் மறுத்தது ‘சுத்தசிவம்’ போலும், சன்மார்க்கம், சிவசன்மார்க்கம்
இரண்டையும் மறுத்தது, ‘சுத்தசன்மார்க்கம்’.
பூர்வத்தில் நின்ற சமயமத சன்மார்க்கங்களை மறுப்பது, சுத்த
சன்மார்க்கம். இதன்
பொருட்டு ‘ஷடாந்த சமரச சுத்த சன்மார்க்கம்’ என்றே
மருவியது. ஒருவாறு, ஷடாந்தங்களின் பொதுவாகிய, ‘ஷடாந்த சன்மார்க்கம்’ ஒன்று;
இதன் பூர்வத்தில் ‘சமரச சன்மார்க்கம்’ ஒன்று; இதன் உத்தரத்தில் ‘சுத்த சன்மார்க்கம்’
ஒன்று. ஆதலால், ‘ஷடாந்த சமரசம்’. ஆன்மாவுக்கு அருள் எப்படி
அனன்னியமோ, அதுபோற் சுத்த சன்மார்க்கத்திற்குப் பூர்வத்தில் சொன்ன
சன்மார்க்கங்கள் யாவும் அனன்னியம்.
[*அனன்னியம் = அன் +
அன்னியம். அதாவது அன்னியம் அல்லாதது. சமயமத
சன்மார்க்கங்கள் என்பவை சுத்த சன்மார்க்கத்துக்கு அன்னியம் அல்ல, அவை ஒன்றிலிருந்து மற்றொன்றாகத் தொடங்கித் தொடர்ந்து
வளர்ந்து மேற்சென்று அறியப்பெறுபவை. அதனால் அனன்னியம்.]
குறிப்பு:- [] எனும் பகர அடைப்புக் குறிக்குள்
இடப்பெற்றுள்ளவை இந்நூலாசிரியர் தந்துள்ள துணைக்குறிப்பு விளக்கங்களாகும்.
இனி, வள்ளல்பெருமான் மேற்குறித்த விளக்கக்
குறிப்பிலே
இடம்பெற்றுள்ள சாரமான செய்திகளைத்
தொகுமொத்தமாக அறிவோம்.
மேற்படி சமரச சுத்த சிவசன்மார்க்கம்
என்பதில் ஷடாந்தம் என்பது யாது?
வேதாந்தம்,
சித்தாந்தம், யோகாந்தம், போதாந்தம், நாதாந்தம், கலாந்தம்
ஆக ஆறு. மேற்படி அந்தங்களின் அனுபவம்,
காலம், இடம் முதலிய வேறுபாடுகளால் ஏறிக் குறையும். ஆதலால், ஷடாந்தமும் வியாபக
மில்லாமல் வேதாந்த சித்தாந்தத்தில் நான்கந்தமும் வியாப்பியமா யிருக்கின்றன.
மேற்படி அந்தம் நான்கின் ஐக்கிய விபரம்:-
வேதாந்தத்தில் போதாந்த யோகாந்தமும்,
சித்தாந்தத்தில் நாதாந்த கலாந்தமும் அடங்கியிருக்கின்றன. இந்த ஐக்கியம்பற்றி
வேதாந்த சித்தாந்தமே இப்போது அனுபவத்தில் சுத்த வேதாந்த, சுத்த சித்தாந்தமாய்
வழங்குகின்றன.
இவற்றிற்கு
அதீதமாகிய சுத்த வேதாந்த சித்தாந்த அந்தாந்தமாகிய சமரச சுத்த சன்மார்க்கமே – நித்திய
மார்க்கம். மேற்குறித்த மார்க்கத்திற்குச் சமயமதங்களாகிய சன்மார்க்கங்கள்
அனன்னியமாய் விளங்கும்; அன்னியமல்ல.
மேற்படி சமயமத மார்க்கங்கள் எவை? எனில்:-
சமய சன்மார்க்கம், மத சன்மார்க்கம்
என இரண்டு. இவற்றுள் அடங்கிய சன்மார்க்கம் அனந்தம். அதில் சமய சன்மார்க்கத்தின்
வகை ஆறு, தொகை முப்பத்தாறு. விரிவு அறுகோடி. இதுபோல், மதத்திலும் வகை தொகை விரிவு
உள்ளன.
மேற்குறித்த
சமயமத சன்மார்க்கங்களில், வகரவித்தை தகரவித்தை யுள. அவை அவ்வச் சமயமத
சன்மார்க்கங்களின் தலைமையாகிய கர்த்தா, மூர்த்தி, ஈசுரன், பிரமம், சிவம்
முதலிய தத்துவங்களின் காலப்பிரமாண பரியந்தமிருக்கும்; அதற்கு மேலிரா.
மேற்படி சமயமத சன்மார்க்கங்களில் ஷடாந்த
சமரச முளதோ வெனில்:-
உளது, யாதெனில்:
வேதாந்த
சித்தாந்த சமரசம்: யோகாந்த கலாந்த சமரசம்: போதாந்த நாதாந்த சமரசம். இதற்கு அதீதம் ஷடாந்த
சமரசம். இதற்கு அதீதம் சன்மார்க்க சமரசம். இதற்கு அதீதம் சுத்த
சமரசம்.
ஆதலால், சுத்த சமரசத்தில், சன்மார்க்கத்தைச்
சேர்க்க, சுத்த சமரச சன்மார்க்கமாம். இது பூர்வோத்சத்தில், கடைதலைப் பூட்டாகச் ‘சமரச சுத்த சன்மார்க்கம்’
என மருவியது.
மூவிரு முடிபும் கடந்ததோர் இயற்கை
முடிபிலே முடிந்தென(து)
உடம்பும்
ஆவியும் தனது மயம்பெறக் கிடைத்த
அருட்பெருஞ் சோதிஅம் பலவா
-
திருவருட்பா – இனித்த வாழ்வருள் எனல்: 4:71:8
‘மூவிரு
முடிபு’ என்பது ‘அறுமுடிபு (சடாந்தம்)’. அந்த அறுமுடிபுக்கும்
கடந்த ஒன்றேயான ‘இயற்கை முடிபு’
என்று ஒன்று உள்ளது. அங்கே எந்தக் கருத்து வேறுபாட்டுக்கும் Á¡ÚÀ¡ðÎìÌõ
ஒருசற்றுதானும் இடமேயில்லை. அந்த இடத்தை எய்தும் அன்பருக்கே உடம்பும் உயிரும்
இறைமயமாகப்பெறும் என்பது வள்ளலார்தம் திருப்பேற்றடைவுத் தன்னிலை விளக்கம்.
¦À¡Ð¦ÅýÚõ ¦À¡ÐÅ¢ø¿¼õ Òâ¡ ¿¢ýÈ
âýº¢ü º¢Å¦ÁýÚõ §À¡¾¡ Éó¾
ÁЦÅýÚõ
À¢ÃÁ¦ÁýÚõ ÀÃÁ ¦ÁýÚõ
ÅÌ츢ý§È¡÷ ÅÌò¾¢Î¸ «Ð¾¡ý ±ýÚõ
þЦÅýÚõ
Íð¼¦Å¡ñ½¡(Ð) «¾É¡ø ÍõÁ¡
þÕôÀЧŠн¢¦ÅÉ즸¡ñ ÊÕ츢ý §È¡¨Ã
ŢЦÅýÈ ¾ñ½Ç¢Â¡ø
¸ÄóÐ ¦¸¡ñÎ
Å¢Çí̸¢ýÈ ¦ÀÕ¦ÅÇ¢§Â Å¢ÁÄò §¾§Å!
-
¾¢ÕÅÕðÀ¡: Á¸¡§¾ÅÁ¡¨Ä:66
தமிழ மக்களோடு கலந்துவிட்ட நிலையில், வேறுபட்ட
நாகரிகப் பண்பாட்டு நிலைகளைக் கடைப்பிடித்திருந்தவர்கள் ஆகிய ஆரிய மக்களை
நல்வழிப்படுத்தும் வகையில், தமிழ முனிவர்களாகிய சான்றோர் பெருமக்கள் அவர்களின்
மொழியிலும் தமிழ்மறைகளில் பொதுளியிருந்த இறையியல் உண்மைகளை அவர்களுள் தகுதி
படைத்தவர்களின் பொருட்டாக அருளிச்செய்துள்ளனர் என்பது பாரிய மறைமலையடிகள் முதலான
பெரியோர்களின் ஆராய்ச்சிகளின் வழியாக வெளிப்பட்டுள்ள வரலாற்று உண்மையாகும்.
அத்தகைய தமிழ முனிவர்கள் அருளிச்செய்துள்ள
அருந்தொடர்கள் இடம்பெற்றனவாகத் திகழ்கின்ற பாட்டுக்களும் சாலப் பல. அவர்களின்
வழியாக தமிழ இறையியல் சிந்தனைகளும் கருத்துகளும் கொள்முடிபுகள் ஆகிய
செந்துணிபுகளும் ஆரிய மக்களுக்கு அறிமுகமாகின.
பின்னர் அவற்றை அடியாகக் கொண்டு பிறந்து வந்த
கலப்புநிலைத் தலைமுறைகளிடையே அவர்களின் மொழிநிலைக் கலப்புக்கு ஏற்ப, அவை அப் புதிய
கலப்பு மொழியில் மறுப்பதிவாக்கம் பெற்றுள்ளன. நேர்பெயர்ப்பு,
கருத்துசார் புத்தாக்கம் எனப்
பலவாறு அவை அமைந்துவரலாயின.
அத்தகையவற்றுள் தலைசிறந்தவை உபநிடதம்
(உபநிஷதம்) என்று கூறப்படும் மெய்யியல்
நூல்கள். அந்நூல்களுக்கு ஒத்த தன்மையது பகவற் கீதை. இவ்விரண்டுக்கும் ஒத்த போக்குடையது பிரம்ம
சூத்திரம். இவைதாம்
மெய்யியல் நிலையில் அந்த வடக்கிலே உருத்திரிந்து உண்டான புதிய வார்ப்புகளாகும்.
இவை, ‘இறை’ என்பதை ‘அது’ அதாவது ‘தத்’ என்று சுட்டும் பாங்குடையவை. ‘ஓம்
தத் சத்’ போன்ற
அருந்தொடர்கள் உயரிய மெய்யியல் தகவு நிறைந்தவை என்பதற்கு ஐயமில்லை.
பூரணம், பரமம் (பிரமம்), சிவம் ... என எத்துணைப் பொருள்பொதிந்த சொற்களைக் கொண்டு
பொதித்துக் குறிப்பிட்டாலும் அச் சொற்களுக்குள் அடங்காத ஒன்றாகவே, இறைநிலை
இருக்கக் கண்டுதான், வள்ளலார் அவ்வாறு சுட்டுவோர் எவரும் அவரவர்தம் உணர்வுக்கு ஏற்பச்
சுட்டிக்கொள்ளட்டும் என்கிறார்.
இந்த ஒப்பற
உயர்ந்த மீமிசை நிலையிலிருந்துதான் திருவள்ளுவர் தம் இறையில் கோட்பாட்டினை
முற்றும் முழுதுமாக விளக்கியிருக்கின்றார். அதனைக்க ண்டுபிடித்துக்கொண்ட
காரணத்தால்தான், தேவர் குறளில் சாகாக்கலை சொல்லப் பெற்றுள்ளது என்று வள்ளற்பெருமானார்
பாம்பின கால பாம்பறியும் என்கின்ற பாங்கில் வெளிப்படுத்தியருளினார்.
மூவிரு முடிபும்
கடந்ததோர் இயற்கை முடிபில் முடிவது என்னும் இறைப்பண்பினை அடிமுதலாக வைத்து; அதனை
ஒருசற்றும் மறவாது எவ்விடத்திலும் ஒருபடித்தாக – ஒருநிலையாகத் திருவள்ளுவர்
திருக்குறளை இயற்கைப் பொதுமையாக அருளிச்செய்திருக்கின்றார். இஃது இம்மட்டில்
நிற்க.
இனி,
அதுமட்டுமின்றி, அவ்விறை அவற்றையெல்லாம் கடந்த நிலையில் இலங்குகின்ற உண்மையினை,
உள்ளும் புறமும் பிரிவற இயைந்து உணர்ந்து களிக்கின்ற அன்பர்தம் உணர்விலே உணரவரும்
தன்மையையே அதைவிடப் பெரிதென்று கூறுகின்றார். ஆகையால், இறைச்சுட்டுதலைவிட,
இறைமயமாய் இருத்தலே சிறந்ததென்று உணர்த்தியுள்ளார் வள்ளற்பெருமானார்.
ஆனால், நூல்வல்ல
கற்றறிவுடையோர்தம் நிலை என்னவாக இருக்கிறது. தெரியுமா? அவர்கள் கற்றுத்தேர்ந்து
தெளிந்துள்ள அவையே - அந்நூல்களே – அந்நூல்களின் அளவே இறை என்பதைப் போலத் தம்மையும்
அறியாமல் கருதிக் கொள்கின்றனர். அதனால்தான், ‘நூல்
அனைத்தும் சாலம் என்று அறி’ என
வள்ளலார் நமக்கு மற்றோரிடத்திலும் தெளிவாக வேறுபடுத்தி நம் நிலைமையைத்
திருத்திக்கொள்ள வழிகாட்டியிருக்கின்றார்.
அவற்றைக் கற்றுக்
கையாள்வோர் தமக்கும் அவற்றுக்கும் சேர்த்து ஒட்டுமொத்தமான இறைமை கோருவதும் –
கருத்துக் காப்புரிமை கோரிக் கொண்டாடிக்கொள்வதும் சால்பாக இல்லை. இடைக்கால,
பிற்காலத் தென்னகத் தமிழர் தமிழ்-சமற்கிருதம் எனும் இருமொழியும் கற்றவர்களாக
இருந்துவந்தனர். ஆனால், வடவர்களோ அவ்வாறு தென்னகத்து முந்து நூல்களையும், அவற்றின்
மெய்யியல் மூலங்களையும் அறிந்தவர்களாக இல்லை என்பது இவ்விடத்தில் நன்கு
வேறுபடுத்தித் தெரிந்து தெளிந்துகொள்ள வேண்டிய வரலாற்று உண்மையாகும்.
ஆற்று
மூலமும் ஆன்றோர் மூலமும் பார்க்கப்படாது [நதிமூலம் ரிஷி மூலம் பார்க்கப்படாது] என்பவர்கள்
ஆன்றோர் அருளிச்செய்துள்ள இறைக் கருத்தியல்களுக்குத் தாமே – தம் இனமே மூலவர் – மூல
இனம் என்கிறார்களே, ஏன்? சிந்திக்கிறீர்களா? சிந்தியுங்கள்! சிந்தியுங்கள்!
காலப் போக்கில் நாவலந் தேயத்தில் உருப்பெற்ற
மெய்யியல் அனைத்துக்கும் தாமே மூலவர், தம்மிடத்து வழங்கிவருகின்ற நூல்களே
மூலநூல்கள் என்றொரு போலியான – பிழையான கருத்து வடபுலத்தவரால் மிகமிக ஆழமாகப்
பதிவாக்கப்பட்டுவிட்டது.
தமது முந்துநிலை
வரலாற்று அறிவு மங்கி
மறைந்துவந்த நிலையில், தென்னகத்தில் இருந்த பின்னையவர்களும் அதனை உண்மை என்று
நம்பிவிட்டனர். அப்படி நம்பியதன் காரணமாகத்தான், வேதத்தை ஏற்கும் மதங்கள் என்றும்,
ஏற்காத மதங்கள் என்றும் இரண்டாகப் பிரிய நேர்ந்திருக்கிறது. ஏற்ற மதங்கள்
அனைத்தும் வைதிக மதங்கள் (வைதிக மார்க்கம்) என்று புதிதாக
முத்திரையிட்டுக் கொள்ளவும் நேர்ந்திருக்கிறது.
இஃது இப்படியாகக் கருத்தியல் உரிமைப் போராட்ட
நிலையாக உருவெடுத்துவிட்டது. இந்த நிலையில், உண்மையைப் பார்ப்பதை விடுத்து,
உரிமைக்குச் சான்றுகூறிப் போராடுகின்ற கருத்துப் போராட்டம் வலுப்பெற்று
வந்துள்ளது. இந்த நிலைமை வள்ளலார் காலம் வரையில் தொடர்ந்தவண்ணமாக இருந்தது.
அவற்றையெல்லாம் பார்த்தபோது, வள்ளலாருக்கு
அவற்றை அவ்வாறு கையாண்டு நிற்கின்ற மக்களின் பேதைமைநிலை நன்றாக விளங்கிய
காரணத்தால்தான், மேற்படித் திருப்பாட்டாக அவரிடத்தில் வெளிப்பட்டது. எதற்குள்ளும்,
எவர்க்குள்ளும், எந்நூலுக்கு உள்ளும் அடங்காத இறையுண்மையினைக் குறித்து; மோதுகின்ற
போக்கு மிக்க வேதனையையும் அவருக்குச் சேர்த்தே அளித்தது. அதனை அருட்பாவில்
விரிவாகப் பார்க்க முடிகின்றது.
நாம் செய்ய வேண்டுவது யாது? இந்தச் சிந்தனைச்
சிக்கு நம் அறிவிலே
அவிழ்க்கப்பெற்றாக வேண்டும்; அதற்கு வெளிப்படைத் தன்மை ஆகிய திறந்த மனம் - மனநிலை நமக்கு வந்தாக வேண்டும்.
இந்தச் சிக்கு நிலை அவிழ்ந்தால்தான், சமரசம்,
சன்மார்க்கம், சமரச சன்மார்க்கம், சமரச சுத்தசன்மார்க்கம் என்ற ஒன்றின் பக்கமாகப் போக முடியும். அப்படி அல்லாத
நிலையிலே, அது குறித்துப் பேசப்படுவன யாவுமே வெற்றுரைகளாக மட்டுமே இருந்துவரும்.
எனவே, காலங் காலமாக என்ற நிலையிலிருந்து நம் காலத்துக்கு அண்மையதான காலத்தவராக
விளங்கியவர் வள்ளற்பெருமானார்.
அவர், அருளாளர்
வரிசையில் அதற்குத் தொடர்ச்சியாக இவ்வுலகிடை வந்தவர். அவர் காலத்தே வந்த நம்
மக்களோ, மருளாளர் வரிசையில் அதற்குத் தொடர்ச்சியாக வந்தவர்கள் என்கின்ற அடிப்படையான
நிலை – தகுதிநிலை வேறுபாட்டை உணர்ந்திடும் போதுதான், நம் நிலைக்கும் அவர்தம்
நிலைக்கும் நடுவே காணப்படுகின்ற ஆன்மநிலை வேறுபாட்டுத் தரத்தை நாம் நன்றாக
வேறுபடுத்தி அறிய முடிகின்றது. முற்றும் அறியமுடியாவிட்டாலும், ஒரு மருங்காவது
அறிய முடிகின்றது. கட்சிநிலை போன்றதொரு நிலையில் இருந்துகொண்டால் நாம் என்றும்
இந்த இயற்கைநிலைக்கு வரமுடியாது.
No comments:
Post a Comment