Thursday, July 18, 2013






தமிழியம் வேறு
ஆரியம் வேறு




«Õì̾ø ±ýÀÐ «Õ¨ÁÀ¡Ã¡ðξø, «Õ¨ÁÌÈ¢òÐப் §À¡üÚ¾ø ±ýÚ ¦À¡ÕûÀÎõ. «Õ¨ÁÌÈ¢òÐ ஒழுக்கத்தின் விழுப்பத்தினால் §À¡üÚ¾ÖìÌரியோர் எனத் தமக்குத் தாமே பெயர்வைத்துக் கொண்ட இனம் ஒன்றுகூட உலகத்தில் கிடையாது. அப்படித் தம்மைத் தாமே வியந்து பாராட்டிச் சொல்லிக்கொள்பவர்கள் பண்பாளர்களாக இருக்க முடியாது. ஆரியர் என்பது இயல்பான இனப்பெயர் அன்று என்பதை இதனால் ±ø§Ä¡Õõ ¯½÷ந்¾¡¸ §ÅñÎõ.

ஆகவே, ஆரிய இனம் என்ற ஓர் இனமே இல்லை என்கின்ற போது, ஆரியம் என்றொரு மொழியும் இல்லை என்பதும் தெளிவாகத் தெரிகின்றது அல்லவா?

உண்மை இப்படியிருக்கையில், சமற்கிருதவாணர் ஆரியர் என்ற சொல்லில், பொதுமைத் தன்மையைக் குறித்த அதன் பொருள்நிலையில் தாமே வலிந்துபோய்த் தம் இனத்தையும் மொழியையும்  புகுத்திக்கொண்டு; ஆரிய (ஆர்ய) வர்த்தம், ஆரியன் (ஆர்ய), அநாரியன் (அநார்ய), ... என்றெல்லாம் கூறிக்கொண்டது எதற்கு? ஆன்ற மொழிகளுள் உயர் ஆரியத்திற்கு நிகரென வாழ்ந்தேன்” என்று மாகவி பாரதி தமிழுக்கு நிகர்சொல்லிப் பாடியதில் வந்துள்ள அந்த ‘உயர் ஆரியம்’ என்பது எந்த மொழி? சமற்கிருத மொழிதானே! அறைகடல் வரைப்பிற் பாடை அனைத்தும் வென்று ‘ஆரியத்தோடு உறழ்தரு தமிழ்த்தெய்வம்’ என்று சிவபிரகாசர் குறிப்பதும் அதைத் தானே?

இனி, இவ்வாறாக ஒரு பொதுப்பெயரைத் தனித்த ஓர் இனத்தின் பெயராக்கிக் கொண்ட சூழ்ச்சியின் முடிச்சினை அவிழ்த்துக் கூறும் வாய்ப்புநிலை பொதுமாந்தரிடையே தூர்ந்துபோய்விட்ட காரணத்தால்தானே, ‘அசிக்க ஆரியங்கள் ஓதும் ஆதர்கள்’ என்று திருமாளிகைத்தேவர் பெருமானும், ‘ஆரியப் புத்தகப் பேய்கொண்டு புலம்புற்று’ என்று நக்கீரதேவர் பெருமானும் தம் திருமுறைகளுள் கடிந்து பாடியருளினர்? இதனை மறுக்கவோ மறைக்கவோ எவருக்கேனும் ஏதேனும் நயன்மையுண்டோ? இவற்றுக்கெல்லாம் மேலாகத் தெட்டத் தெளிவாகப் பிங்கல நிகண்டு “மிலேச்சர் ஆரியர்” என்று நூற்பாவே [காண்க: நூற்பா 797] அமைத்துள்ளது. ‘மிலேச்சர்’ என்பது அநாகரிகத்தால் கீழ்த்தரமாய் உள்ளவர்களைக் குறிக்கிறது.

இவர்கள் யாவரும் திருநாவுக்கரசர் காலத்திற்குப் பிற்பட வந்தவர்கள். இவர்கள் காலத்திலும் ஆரியமும் தமிழும் முரண்கொண்ட நிலையில் இருப்பதை மேற்கண்ட வரிகள் தெளிவாக்குகின்றன. ஆனால், திருநாவுக்கரசர் காலத்திலோ நிலைமை சிறிது இணக்கமுள்ள நிலையில் இருந்துள்ளதை ‘ஆரியன் கண்டாய் தமிழன் கண்டாய்’ என்பதாலும், மற்றுள்ளவற்றாலும் அறியமுடிகின்றது. அந்த இணக்க நிலை தொடரவில்லை, இடையிலேயே தொய்ந்துவிட்டது என்பது மேலே எடுத்துக்காட்டிய அப்பருக்குப் பிற்பட்டு வந்த மூவரின் கருத்தும் நமக்குத் தெளிவாக்குகின்றது.

இந்த இணக்கநிலை முறிந்துபோய், பதினேழாம் நூற்றாண்டுவாக்கில்  ஆரியத்திற்கு உயர்வும் தமிழுக்குத் தாழ்வுமாகிவிட்ட ஒரு பாரிய ஏற்றத்தாழ்வான நிலையில் சென்றுவிட்டதைத் பரஞ்சோதி முனிவர் பாடியருளிய திருவிளையாடல் புராணம் முதலான தமிழ்த்தொன்மங்களே தெரிவிக்கின்றன. சான்றாக,

கண்ணு தற்பெருங் கடவுளும் கழகமோ டமர்ந்து
பண்ணு றத்தெரிந்(து) ஆய்ந்தஇப் பசுந்தமிழ் ஏனை
மண்ணி டைச்சிலஇலக்கண வரம்பிலா மொழிபோல்
எண்ணி டைபடக் கிடந்த்தாய் எண்ணவும் படுமோ?
                            - திருவிளையாடல் புராணம்

என்பதைக் காணலாம். பொதுவில் பார்த்தால், கூறுகின்ற மதவியல் கருத்தில் ஏறத்தாழ ஒன்றாய்ச் சென்றாலும், சொல்லவரும் மொழிவகையால் ஏற்றத்தாழ்வைக் கற்பித்துக் கடுத்துநிற்கின்ற நிலைக்குக் காரணம் என்னவோ?

அடுத்து, முடிந்துவிட்ட இருபதாம் நூற்றாண்டில், காஞ்சிப் பெரியவர் என்று பட்டங்கட்டிக்கொண்டிருந்த காஞ்சிபுரத்துச் சங்கராச்சாரியக் கூட்டத்தாரே! உங்களை நோக்கிக் கேட்கிறோம். சரி, நீங்கள் ஆரியர் என்ற இனப்பெயரை எடுத்துக்கொள்வதற்கு முன்னர், உங்கள் இனத்திற்கு இருந்த பெயர் என்ன என்று கூறமுடியுமா?

இனப்பெயர் இல்லாத இனமா நீங்கள்? மொழிப்பெயர் சமற்கிருதம் என்று இருக்கும்போது, ஏன் அதன் வழிசார்ந்த இனப்பெயர் உங்களுக்கு இல்லை? சிந்திக்கிறீர்களா? சிந்தியுங்கள், சிந்தித்து ஒரு முடிவுக்கு வாருங்கள்! தெலுங்கு - தெலுங்கர், கன்னடம் - கன்னடர், வங்காளம் - வங்காளியர், நேப்பாளம் – நேப்பாளியர், மலையாளம் - மலையாளியர், சிங்களம் - சிங்களர், பஞ்சாபி – பஞ்சாபியர், மராட்டியம் - மராட்டியர், குசராத்தி - குசராத்தியர், சிந்தி - சிந்தியர்... என்று மொழிப்பெயரால் இனப்பெயர் அமைந்துகாணும் உலக வழக்கம் ஏன் இதில் இல்லை?

பல்வேறு நிலைசார்ந்த, தொழில்சார்ந்த குடும்ப வழிகளில் பிறந்து; உயர்ந்தோர் எனச் – சான்றோர் எனத் தம் வாழ்க்கை நிகழ்ச்சிகள் வழியாக மதிப்புப்பெற்றுப் போற்றிப் பின்பற்றப்பட்ட பெருமையுடையவர்களையும், அப்படி உண்மையிலேயே ஒரு பெருமையும் இல்லாதவர்களையும், தங்களின் குலமுதல்வர்களாகக் கூறி; அடையாளப்படுத்தி; அதாவது இன்னின்ன முனிவர்களின் அரத்த (இரத்த) உறவுவழிப் பிறந்தவர்களாகத் தங்களை உயர்ந்தோர் (பண்பாளர்) வழிவந்த உயர்ந்தோர் (ஆரியர்) என்று மிகத் திறமையாகச் சொல்லிக்கொண்டு வந்துள்ள வரலாற்று ஊழல்தனம் இப்போது வெளிப்பட்டுவிட்டது.

இந்த அடிப்படையில்தான், “ஆரியர் என்போர் பண்பாளர்” என்ற  இயல்பான – பொதுவான பெயரை, இந்த நாவலந்தேயத்திற்கு உலகியல் பொதுப்படையாக உள்ளதோர் உண்மையை, தனித்த ஓர் இனத்தினராகத் திரித்துக் கூறிக்கொள்கின்ற கூட்டத்தார், தம் சூழ்ச்சி – குட்டு வெளிப்பட்டுவிட்டதை மறைத்துக்கொள்ள இப்படி முன்னுக்குப் பின் முரணாகப் பேசிவருகின்றனர் – பொய்மாயம் பூசிவருகின்றனர்.

ஒவ்வொரு முனிவரின் பெயரிலே, ஒவ்வொரு கோத்திரத்தை அமைத்துக் கொண்டு காசியப கோத்திரம், வசிட்ட கோத்திரம், பாரதுவாச கோத்திரம், ... என்றும்; ஒவ்வொரு கோத்திரத்தினரும் நான்கு வேதங்கள் என்பவற்றுள் யாதானும் ஒரு வேதத்தைக் கொண்டு – அவர்கள் அவ் வேதத்துக்கு உடையவர்கள் என்றும் காலங் காலமாகக் கூறிக்கொண்டு கபட நாடகமாடிக் கொண்டிருக்கின்றனர்.

காலப் போக்கில் அவர்களை அடிசார்ந்து கொண்ட அரசகுலத்தாரும் தமக்குக் குலமுதல்வனாக ஓர் ஆரியப் பார்ப்பன முனிவனையே (அப்படி இல்லாவிட்டால் ஆரியப் பார்ப்பனன் அல்லாத தமிழ-திரவிட முனிவர்களாயின் அவர்களின் இயற்பெயரை மறைத்துச் சமற்கிருதப்படுத்திக்),  குறிப்பிட்டுக் கொண்டதோடு ஆரியப் பார்ப்பனரைப் போலவே தாமும் யாதானும் ஒரு வேதத்தைத் தழுவியவர்களாகத் தம்மை அடிமைசெய்துகொண்டனர். அதற்கேற்பப் பூணூலும் அணிந்துகொண்டனர்.

அந்த ‘வருண உயர்த்துதல்’ அல்லது வருணத் தூக்குதலிலும்கூட ஒரு சூழ்ச்சிநிலை உண்டு. அதாவது, வேதம் வரைக்கும் செல்லமுடிந்தாலும்; அதற்கான உரிமைதரும் பூணூலின் நிறமும் அதனுடைய செய்பொருளும் வேறுபடுத்தப்பட்டன. [ பூணூல் என்னும் முப்புரிநூல் அணிவதற்கான மெய்யியல் ஒழுக்கநிலைக் குறியீட்டு விளக்கப்படி பார்த்தால், குல அல்லது வருணநிலை உயர்த்தலுக்கும் பூணூலுக்கும் தொடர்பேயில்லை. அதனைக் குலநிலையோடு முடிச்சுப்போட்டுக் கூறுவது என்பது முற்றிலும் உண்மைக்கு மாறான கருத்தாகும்.]

இந்த நிலைகெட்ட அறக்கேட்டிற்கு – அறிவுக்கேட்டிற்கு ஐந்திரவிடருள் (பஞ்சதிரவிடர்) நடுதிரவிடர்கள் ஆகிய மராட்டியர்கள் குறிப்பிடத்தக்க எடுத்துக்காட்டாக விளங்கிவருகின்றனர். இப்படியாகப் பூசக (பூசாரி) வகுப்பினரும் அரச வகுப்பினரும் தம்மை ஆரிய இனமாகத் திரித்துக் காட்டிக்கொண்ட சூழ்ச்சியில் விலக்கமுடியாத பங்குடையவர்களாகச் சமற்கிருதவாணர்தம் குடித்தலைவர்கள் இருந்துள்ள உண்மை இதன்வழிப் புலப்படுகின்றது.

இந்த உள்நாட்டுத் திருட்டுத்தனப் பேர்வழிகளோடு, வெளிநாட்டிலிருந்து வந்த வெள்ளைநிறத்து மக்களும் கூட்டுகண்டனர். எனவேதான், உள்நாட்டிலிருந்த கரிய – பொன்நிற – சிவத்தத் தோல்நிறமுள்ள மக்கள் கூட்டங்களின் பலபடியான கலப்பினமாகவே இந்தப் புதிய ஆரியக் கூட்டத்தார் காணப்படுகின்றனர். இதற்கு இராமாயணக் கதையிலும் மாபாரதக் கதையிலும் நிறைய இடைச்செருகல்வழி வரம்புகட்டி வாழ்வியலாக்கிக் கொள்ள முயன்றுள்ள முயற்சிகளின் கடுமையையும் கொடுமையையும் நிரம்பக் காணமுடிகின்றது. இது முதன்முதலில் வடக்கத்தியார்க்கு (வடதமிழர்க்கு - வடதிரவிடர்க்கு)ப் பிடித்த கருத்துப் பித்துநிலை.

மாபாரத முதன்மைக் கதைமாந்தர்களான கண்ணன், அருச்சுணன், திரெளபதி, ... போன்ற பலரும் கரிய நிறத்தவர்களாவர் என்பதை கூர்ந்து கவனித்தால் இந்த உண்மை விளங்கும். ஏன் மாபாரதத்தைத் தொகுத்தமைத்த கிருட்டிண வியாசர் என்னும் வியாசமுனிவரே கரியநிறத்தவர்தான். பீமன் மனைவியும், நகுலன் மனைவியும் கரிய நிறத்தினரே. இது நிறக்கலப்பு உண்டானதற்கு நல்ல சான்றல்லவா? மாபாரதமும் இராமாயணமும் முற்றிலும் ஆரியத் தலைமக்களைக் கொண்டமைந்தவை அல்ல. அவை தமிழ-திரவிட-ஆரிய இனமாந்தரின் கலப்பினக் கலப்பிணக்கத்தின் விளைவாகும்.

சுருங்கச் சொல்வதானால், வடபுலத்தில் நேர்ந்துவிட்ட இனக் கலப்பினாலும் மொழிக் கலப்பினாலும் தோன்றிவிட்ட புதிய கலப்பினமும் அதன் கலப்புமொழியும் தன்னை முதற்றிக்கொண்டு; ஏற்கனவே இருந்துவந்த உயர்ந்த பண்பாட்டுப் பழக்கவழக்கங்களை தன்வயப்படுத்திக்கொண்டதோடு மட்டுமன்றி, புதிய கலப்புநிலைக்கு உட்படாத ஏனையோரைத் தமக்குக் கீழ்ப்படுத்திவைத்துக்கொண்ட – வைத்துக்கொள்ப் போராடி நின்ற புதிய ஏற்பாடே ஆரியம் என்பதாகும்.

இந்தப் புதிய ஏற்பாட்டினால், ஏற்கனவே இருந்தவந்த அனைத்துமே ஒரு தலைகீழ்மாற்றத்துக்கு ஆளாயின. கல்வி, பொருளியல், தொழிலியல், குமுகியல், மதவியல், சொத்துடைமை, மணவியல், மனையியல், ... என்றுள்ள அனைத்து வாழ்வியல் வாய்ப்புநிலைகளும், வரம்புநிலைகளும், உரிமைநிலைகளும், ஒழுக்கநிலைகளும் குறிப்பிட்ட கூட்டத்தார்க்குச் சார்பாகவும் ஏனையோர்க்கு மாறாகவும் ஊறாகவும் மெல்லென உருக்கெட்டுப்போயின.

இப் புதிய வடபுலத்துக் கலப்பினங்களின் பண்பாட்டுப் படையெடுப்பு அல்லது தாக்குதலுக்கும் தழுவுதலுக்கும் இடங்கொடுத்து வந்துள்ள அளவுக்கு, மூலத் தமிழ் நிலையிலிருந்து சிறிது சிறிதாக விலகிச்சென்ற - விலகிக்கொண்ட ஏனைய தமிழினக் கிளைகளின் கூட்டுறவும் காலப்போக்கில் இசையப்பெற்ற நிலையில், அந்த வடபுலத்து ஆரியர் என்னும் கலப்பினத்தார் மேலும் வலிமைபெற்றவர்களாயினர்.

இவர்கள் தமிழ் – தமிழர் - தமிழியல் என்னும் அடிப்படையிலிருந்து அடியோடு நிலைபெயர்ந்துபோய்; உருமாறி – உளம்மாறி - உணர்வுமாறி நம்மிடமிருந்து மிகப் பெரிதும் விலகிப்போய்விட்ட தொல்பழைய வடதமிழ (வடதிரவிட) – நடுத்தமிழ (நடுத்திரவிட) இனவுறவுகளே என்றாலும், அவர்களின் ஒழுக்கமும் நமது ஒழுக்கமும் வேறுபட்டுவிட்டன.

இப்படியாக அவர்களின் தமிழத்தன்மையைச் சார்ந்திருந்த மனநிலையில் திரிபு ஏற்பட்டு; அதனால் இனநிலையிலும் திரிபு ஏற்பட்டுத் தமிழ மரபிற்கு வேறாகி இருந்தனர். அந்தத் திரிபுநிலையில் வெளியேயிருந்து நாவலந் தேயத்துள் குடிபுகுந்த அயலினத்தவரோடு கலந்து உருப்பெற்ற கலப்பு இனநிலைக்கு அவர்கள் புதிதாக ஆரியர் என்றொரு பெயரிட்டுக்கொண்டனர். அந்தப் புதுமை பழைமையாக இருந்துவருகின்ற தமிழ்மைக்கு மாறுகொண்டு அதனை முதலில் மறுத்தும் பின்னர் மறைத்தும் விட்டது.

இதற்கு நல்லதொரு சான்றாக இராமாயணக் கதையை எடுத்துக்கொள்வோம். வால்மீகி படைத்துள்ள முறையில் அப்படியே தழுவிக்கூற முடியாத ஒழுகியல் வேறுபாடுகள் காரணமாகத்தான் அதனைத் தமிழாக்கித் தந்த கம்பநாடர் தமிழர்தம் களவியல் கற்பியல் அகவொழுக்கத்திற்கு ஏற்ப, வேண்டிய இடங்களில் வேண்டிய அளவுக்கு முடிந்தமட்டில் மாற்றஞ்செய்துள்ளார் என்பது எல்லோர்க்கும் ஒப்ப முடிந்த முடிபு.

எனவே, வடவர் ஒழுக்கம் தென்னவர் ஒழுக்கத்திற்கு வேறுபட்டுப்போய் நிலைமாறியிருக்கிறது - நிறம்மாறியிருக்கிறது என்னும் வரலாற்று வாழ்வியல் உண்மை வெட்டவெளிச்சமாகிறது.

இனி, இதைச் சற்றே கூர்ந்து கவனித்தால், இந்தக் கலப்பு – கூட்டுறவு என்பதெல்லாம்கூடப் பெரிதும் அரச வகுப்பிலும், பூசக வகுப்பிலுமே நடந்திருக்கிறது. ஏனைய வகுப்புகளில் அது நிகழவில்லை. ஓரளவு ஒருசில வணிக வகுப்பிலும் அது நடந்திருக்கிறது. வலியவரெல்லாம் கூடிக்கொண்டனர்; ஒரே கூட்டணியாயினர் என்பதுதான் இதன் முடிந்த முடிவான கருத்தாகும். இன்றைக்குத் தம்மை ஆரிய வழிசார்ந்த பார்ப்பனக் குலத்தவராகக் கூறிக் கொள்பவர்களிடையே ‘பல திறப்பட்டவர்கள்’ என்பது மட்டுமல்லாமல், பல நிறப்பட்டவர்கள்’ காணப்படுதவற்குக் காரணமும் இதுவேயாகும்.

 பெரும்பாலான பொதுமக்கள் இவர்களின் உறவு இல்லாதவர்களாகவே தனித்து நின்றனர். அவர்கள் கலப்புக்கு ஆளாகவில்லை - இடந்தரவில்லை. அவர்கள் வறுமையிலும் அடிமைத்தனத்திலும் படிப்படியாக வீழ்ந்துள்ளனர் – வீழ்த்தப்பட்டுள்ளனர்; தாழ்ந்துள்ளனர் - தாழ்த்தப்பட்டுள்ளனர்.

அறிவிலும் ஆற்றலிலும் ஆளுமையிலும் வலியவர்களெல்லாம் சேர்ந்துகொண்ட கூட்டணிக்கு அவர்களாகவே வைத்துக்கொண்ட கள்ளப்பெயர்தான் ஆரியம் - ஆரியர் என்று முடிவாகக் கூறலாம்.

[ குறிப்பு: இதனால், ஆதியில் ஆன்மச் செந்நிலையைக் குறித்து எழுந்த ஆரியர் என்னும் பழைய தமிழ்ச்செஞ்சொல்லுக்கு இருந்த ஆன்றோர் – உயர்ந்தோர் எனும் பண்புநிலை மேம்பாட்டினால் விளங்கிவந்த மூலப்பொருள் விளக்கம் மறைந்துபோய்விட்டது. புதிய கள்ளப்பொருள் வழிக் கயமைக்கசடுகள் பண்டைய செந்நூல்களில் செருகலாகித் தலைவிரித்தாடின. ஆரியம் – ஆரியர் என்பவை இன்றைய நிலையில் அடைந்திருக்கும் பொருள்நிலை மாற்றமே நிலைத்துவிட்டது. அதற்கு பண்டைக் காலத்தில் இருந்த வந்த உண்மைப் பொருள்நிலை முற்றுமாக அழிந்துவிட்டது. நாம் பழைய பொருளை (கருத்தை) நினைத்து அதனைத் திரும்பவும் வழக்குப்படுத்த வாய்ப்பே இல்லை. எனவே, இன்றைய நிலையில் அஃது ஓர் இனக்குழுவினரைக் குறிக்கும் சொல் என்பதை நாமும் ஏற்றாகவேண்டிய நிலைமை வலுப்பெற்று இருக்கின்றது. ]

பழைய வரையறைப்படிப் பொதுமைநிலை சார்ந்ததாக விளங்கிவந்த இச் சொல்லைத் தம் தனிநிலைக்கு உரியதாக்கிக்கொண்ட அறம்பிறழ்ந்த கயமைச் செயல்நிலைக் கரவுதான் ஆரியம் என்னும் புதிய வரையறை. அதற்கு உரிய புதிய சீர்திருத்தப்பட்ட கலவைமொழிதான் சமற்கிருதம் என்னும் ஆரியம். ஆரியம் என்ற பெயர் வேறெந்த மொழிக்கேனும் வேறெங்கேனும் உளதோ?

ஆரிய தருமம் என்ற புதிய ஏற்பாட்டினைத் தொடர்ந்து உண்டாகி வந்த கலப்பு நிலைகளுக்குத் தனித்தனியாகப் பெயரிட்டுக் கூறுபோட்டுத் தனித்தனிக் கூட்டங்களாக - குலங்களாக வைத்திருக்கும் நூல்களுள் தலைமையானது மநுநீதி எனப்படும் மநுஸ்மிருதி என்பதாகும். அதில் வகுத்து வரையறுத்துக் குறிப்பிடப் படுகின்ற சாதிகளைச் சற்றுக் கவனித்தாலும், தலைமையாளர்களாகத் தங்களைத் தக்கவைத்துக்கொள்ள முயன்றுள்ள பூசக வகுப்பாரின் போக்கு நன்கு விளக்கமுறும்.

மேலும், இந்த மநுநீதி உண்டானதுகூட மராட்டியமும் கன்னடமுஞ் சார்ந்த நடுத்திரவிடப் பைதிரத்தில்தான் என்பது ஆய்வறிஞர் கருத்து. இந்தப் புதிய கலப்பின ஏற்பாடு பழைய மூல ஏற்பாடாகிய உண்மைத் தமிழ் நாகரிகத்தில் புல்லுருவியைப் போலப் பாய்ந்து பற்றிக்கொண்டுள்ள ஒட்டுண்ணித்தனம் தெளிவாகும். இதையெல்லாம் காலநிரல்படி நோக்கினால் உண்மை தானாகப் புரிந்துவிடும். ஆகையால், ஒருசார் தமிழப் பார்ப்பனரும் அயலினத்தவரும் அரசவணிகக் கூட்டுறவோடு “தலை எது? வால் எது?” என்று தெரியாதபடிக்கு எல்லாவற்றையும் உருத்திரித்துவிட்டார்கள் என்பது உண்மையே.

“செயற்கரிய செய்யும் பெரியோர் - உயர்ந்தோர்” ±ýÛõ ¾Á¢ú «È¢Å ÁÃsì ÜüÈ¢¨Éì ¦¸¡ñÎ; ±¨¼§À¡ðÎî º£÷àì¸ ÅøÄÅ÷¸ÙìÌ þ¾ý ¯ñ¨ÁÂ¡É ¸ÕòРŢÇí¸¢Å¢Îõ. ÁüÈÅ÷¸ÙìÌ Å¢Çí¸¡Ð; விளக்கினாலும் விளங்காது; Å¢Çí¸¢É¡Öõ Å¢Çí¸¡Ð. பெரியாரைத் துணைக்கோடல் – பெரியாரைப் பிழையாமை என்று நேர்முறை - எதிர்மறை ஆகிய இருமுறையிலுமாக அற்றைய ஆட்சியாளர்களுக்கு மட்டுமன்று; ஒட்டுமொத்தமாகத் தமிழப் பெருமக்கள் - பொதுமக்கள் என அனைவருக்காகவுமே அறிவுறுத்தாகவும் அச்சுறுத்தாகவும் திருவள்ளுவர் அருளிச்செய்துள்ளார் என்பதை ஆழ்ந்து இவ்விடத்துச் சிந்தித்துக் கொள்வது கோடிநலம் தரும். இவ்வுண்மை அறிவென்பது அற்றைக்கு மட்டுமன்று இனி எற்றைக்குமே எண்ணிக் கடைப்பிடித்தக்கது என்பதற்கு ஐயமும் உளதோ?

No comments:

Post a Comment