Saturday, July 13, 2013

இக் காலத்திலே சமற்கிருத மொழியிலே கிடைக்கின்ற தொன்மக் கதைகளில் கூட குமரி நாட்டுக்குச் சான்றுகள் உள்ளன. போகவதி என்னும் தென்பால் மண்டில நகரம் பற்றிய குறிப்பு அவற்றுள் ஒன்றாக உள்ளது. தொன்மங்களில் புறக்கணிக்கத் தக்க செய்திகளோடு, இவ்வாறு துணைகொள்ளத்தக்க ஒருசில செய்திகளும் இருக்கவே செய்கின்றன. அவற்றை அவ்வளவ்வில் மட்டும் பயன்கொள்வோமாக. அகத்திய மலை, விடவ மலை (விடப மலை)  என்பவற்றை அகஸ்திய மலை, ரிஷப மலை எனக் குறிப்பது வரலாற்று முரண் ஆகும். இப் பகுதியில் என்றுமே வடமொழி இருந்ததே இல்லை. இவை இருந்த காலத்தில், வடமொழியாகிய சமற்கிருத மொழியே இன்னமும் தோன்றவில்லை - இல்லை. வடமொழி நூல்களில் சொல்லப்படுகின்ற குமரி நாட்டை உண்மை என்று ஒப்புக்கொள்பவர்கள், ஏனோ தெரியவில்லை தமிழ்நூல்களில் கூறப்படுகின்ற குமரி நாட்டை இல்லை என மறுக்க விரும்புகின்றனர். தமிழ்மொழியில் சொன்னால் பொய்; அதையே வடமொழியில் சொன்னால் உண்மையா? நன்றாய் இருக்கிறதே ஞாயம்.



No comments:

Post a Comment