Thursday, July 18, 2013






எண்

தமிழ்வாணர் கொள்கை தமிழியம்


சமற்கிருதவாணர் கொள்கை ஆரியம்



தமிழியம் – தென்னெறி – தென்மதம் – தமிழ்ச்சமயம் என்பன இதன் புதிய பெயர்கள். தமிழ்நெறி, திருநெறி, பெரு நெறி, அருள்நெறி, ஒளிநெறி என்பன இதன் பழைய பெயர்களுள் ஒருசில.


இந்து (இந்துவியம் - Hinduism) - இந்துத்துவா என்பவை  இதற்கு ஏற்பட்டுள்ள புதிய பெயர்கள். சனாதன தருமம், வைதிகம் – வைதிக மார்க்கம், ஆரியம் என்பவை இதன் பழைய பெயர்களுள் ஒருசில.


1.

குமரி நாடாகிய கடல்கொண்ட தென்னாட்டிலிருந்து தமிழர் வரலாற்றைத் தொடங்கி; கிழக்கு-மேற்கு-வடக்கு திசைகளை நோக்கி நிகழ்ந்த அதன் மக்கள் பரவலைக் கூறுதல்.


வடநாட்டிலிருந்து ஆரியர் என்னும் இனத்தினரின் வழியாக அவர்களையே அனைத்துவகை கலையறிவியல் – நாகரிகப் பண்பாட்டு மூலவர்களாகக் கொண்டு தமிழ்வரலாற்றைத் திரித்து மறைத்துக் கூறுதல்.

2.

முற்றிலும் தமிழ்நூல் முறையில் இயங்குவது.அறம் – பொருள் –இன்பம் - வீடு என்பவையே நான்மறை. இவை நான்கும் மூலத்தமிழ்க் கோட்பாடுகள். நான்கு புத்தகங்கள் அல்ல.

முற்றிலும் ஆரியநூல் முறையில் இயங்குவது. இருக்கு – யசுர் – சாமம் - அதர்வணம் என்பவையே சதுர்வேதம். இவை ஒரே புத்தகத்தை நான்காக்கி வைத்துள்ள தொகைப் (தொகுப்புப்) புத்தகங்கள்.

3.

முற்றிலும் தமிழ்ச்சான்றோர் தலைமைவழி இயங்குவது.

முற்றிலும் ஆரிய முனிவர் தலைமைவழி இயங்குவது.


4.

வேட்கை ஒழிதல்வழி அவரவர்தம் அகத்திலே அடைய வருவது அருமறையந்தம். அறம் – பொருள் – இன்பம் - வீடு என்னும் அருமறை நான்கனுள் அந்தமாகி நிற்பது வீடு; அதுவே தமிழியம் கூறும் அந்தம் - அருமறையந்தம்.


நான்கு புத்தகங்களாகிய சதுர்வேதத்தின் கடைசிப் பகுதியே வேதாந்தம். அதன்வழி அடைவது முத்தி.





5.

ஆன்மிகம், சமயம், மதம் என எதுவாக இருந்தாலும் அவை பொதுவில் எல்லார்க்கும் உரியவை.

ஆன்மிகம், சமயம், மதம் என எதுவாக இருந்தாலும் அவை வருணாச்சிரம தருமம் என்பதன் வழியாகத்தான் உரிமைப்படும்.



6.

உலக முதற்றாய்மொழி தமிழ். தமிழ் தனித்து இயங்கவல்லது. தாய்மைப் பண்போடு அனைத்து மொழிகளையும் அரவணைப்பது தமிழ்மொழி. தனக்கேயுரிய இலக்கணச் செம்மைகொண்டு நீடுவாழும் திருமையுடையது.


உலக முதற்றாய்மொழி சமற்கிருதம். சமற்கிருத தயவு இல்லாமல் தமிழ் தனித்து இயங்க முடியாது. தான் என்னும் தருக்கு மிகுந்து தன்னை உயர்த்திக்கூறிப் பிற மொழிகளைத் தாழ்த்துவது சமற்கிருத மொழி.


7.

மக்கள் மட்டுமல்லர், எல்லா உயிர்களும் சமத்திறமானவை. பண்பு வழியாக மக்களுக்குள் உறவும் பிறவும் அமைந்திருக்கும். பிறப்பு ஒக்கும் எல்லா உயிர்க்கும். ஒப்புரவு செய்து வாழ்விக்கும் பண்பினை அருளுவது தமிழ்மரபு.

மக்கள் அடிப்படையில் நான்கு வருணங்களுள் அடங்கியவர்கள். அவ் வருணத்திலிருந்து மேலும் பலபல மேல்கீழான சாதிகளைக் குடும்பவழிப் பிறப்பு முறையில் அடைவர். அவை அவரவர் பாவபுண்ணியத்தின் காரணமாக அமைந்திருப்பவை. உயர்வுதாழ்வு கூறிச் சிறைப்படுத்தும் கொடும்போக்குக் கொண்டு இருளுவது ஆரிய மரபு.


8.

தமிழ் திரவிட மொழிகளுக்குத் தாய்; ஆரிய மொழிகளுக் கெல்லாம் மூலம்.

சமற்கிருதமே தமிழ் உள்ளிட்ட எல்லா மொழிகளுக்கும் தாய். உலக மொழிகளுக்கெல்லாம் மூலம்.


9.

எந்த மொழியில் இருந்தாலும் ஆன்றோர் சொல் மதித்துப் போற்றற்பாலது. கடவுள் முன்னிலையில் மொழி ஏற்றத்தாழ்வுகள் கிடையாது. எல்லா மொழிகளும் வழிபாட்டுக்கு ஏற்றவை.

சமற்கிருதம் மட்டுமே தேவமொழி; மற்றவையெல்லாம் பேய்மொழி. இது படைப்பினத்தின் வழியான கருத்து. சமற்கிருதம் பிரம்ம(பிராமண)மொழி; தமிழ் சூத்திர மொழி(பாஷை). இது வருணாச்சிரமம் வழியான கருத்து. அதனால், தமிழ் மறைநூல்களாக இருக்கும் திருமுறைகளும் நாலாயிரத் திவ்வியப் பிரபந்தங்களும் சூத்திர வேதம். அவற்றைப் பாடியவர்களுள் ஒருசிலர் பிராமணர்களாக இருந்தாலும் கூட, அவர்கள் பாடியது சூத்திரர்களின் மொழியாகிய தமிழில் என்ற காரணத்தால் அவை சூத்திர வேதம். அவை ஆரிய பிராமண வேதம் ஆக முடியாது; அவை ஆரிய வேதத்துக்குத் தாழ்ந்த தரத்தவை.

10.

கோயில் வழிபாடும் மற்றெல்லா வழிபாடுகளும் சடங்குகளும் தமிழ்மொழியில் நடைபெறுதல் வேண்டும்.


கோயில் வழிபாடும் மற்றெல்லா வழிபாடுகளும் சடங்குகளும் சமற்கிருத மொழியில்தான் நடைபெறவேண்டும்.


11.

அகப்புறத் தூய்மை உள்ள யாரும் பூசை செய்யலாம்.

பிராமண வருணத்தில் பிறந்தவர்கள் மட்டுமே பூசைசெய்ய முடியும்.



12.

எத்தொழில் செய்தாலும் எந்த நிலையில் இருந்தாலும் அகத் தூய்மையால் இறைப்பேறு பெறலாம்.

அவரவர் வருணத்திற்கு ஏற்பவும் சாதிக்கு ஏற்பவுமே இறைப்பேறு பெறமுடியும். அதனால்தான், கரும கிரியையின்போது நான்கு வாசல் திறக்கபடுகிறது.


13.

கொலை வேள்வி, கொல்லா வேள்வி என எந்த வேள்வியினாலும் இறைப்பேறு அமையாது.

கொலை வேள்யினாலும், கொல்லா வேள்வியினாலும் இறைப்பேறு அமையும்.



14.

எல்லோரையும் போல எளிமையாக வாழ்ந்துகொண்டு; மக்களுக்கும் பிறவுயிர்களுக்கும் கருணையினால் கசிந்துருகி நேசத்தால் ஈசன் என நினைத்து நலம் செய்பவர்கள் அந்தணர் – அறவோர்.

எல்லோரையும் போல இல்லாமல், தமக்கு என ஒரு தனி வேடமிட்டுக் கொண்டு; தீட்டு – தீண்டாமை பார்த்துக்கொண்டு; வருணாச்சிரம தருமப்படி ஆள்பார்த்து – சாதிபார்த்து நல்லது செய்ய முன்வருபவர் பிராமணர்.


15.

எல்லா உயிரும் பராபரன் சந்நிதி – இறைவனுக்குச் சந்நிதி – கோயில்.

பிராமணனே தெய்வ சாந்நித்யம் உள்ளவன். அதனால், அவன் பூசுரன் (பூவுலகத் தேவன்).



16.

எல்லோருமே நேரே இறைவனை வழிபட்டு அவனைச் சேரலாம். நடுவே எந்தத் தரகரும் தேவையில்லை.

எல்லோர்க்கும் பிராமணனே தெய்வம். பிராமணனை வணங்கிப் படிப்படியாக உயர்ந்த பிறப்பாகிய உயர்ந்த வருணத்தில் பிறந்தால்தான் இறைவனை அடைய முடியும்.

17.

யாரும் தவம் செய்யலாம்.

சூத்திர வருணத்தினர் தவம்செய்யக் கூடாது. அப்படி மீறிச் செய்தால், பிராமணர்களுக்கும் உலகத்துக்கும் அதனால் கெடுதல் ஏற்படும்.


18.

யாரும் எங்கும் எத்தொழிலும் செய்து உயர்வுபெறலாம்.

அவரவரும் அவரவர்க்கு வரையறுக்கப் பட்டுள்ள வருணமுறைக்கு உட்பட்டுத் தம் முன்னோர் அதாவது பரம்பரைத் தொழிலாகச் செய்துவந்த தொழிலைச் செய்ய வேண்டும்.


No comments:

Post a Comment