Thursday, July 18, 2013



வதி > வசி > வாஸ்


      வதிதல் என்றால் ஓர் இடத்தில் அல்லது ஊரில் தங்கிவாழ்தல் என்று பொருள்படும். அது பதி > வதி என்று உருவாகி வந்த சொல். பதிதல் என்பது ஓரிடத்து நிலைபெறத் தங்குதல். அவ்வாறு, பதிந்து வாழும் இடம் அல்லது ஊர் பதி எனப்பட்டது பழந்தமிழ் வழக்கு.

      பதி என்பது தங்கிவாழும் ஊர், பேரூர், மூதூர் என்று பலதிறப்பட்ட ஊர்களையும் குறித்துள்ளது. அதோடு. எல்லார்க்கும் பொதுவான இறைவனின் கோயிலும் பதி என்று கூறப்பெற்றுள்ளது. அது திருப்பதி என்று சிறப்பித்துச் சொல்லப்படும். இன்று திருவேங்கட மலையில் உள்ள திருவேங்கடவன் பெயரால் திருப்பதி என்ற பெயரோடு அவர் எழுந்தருளியுள்ள ஊர் பெயர்பெற்று விளங்குகின்றது.

      தொடர்ந்து, பதி > வதி என்பவற்றின் பெயர்ச்சி நிலைகளை வடமொழியை வளர்த்துள்ள வகையைக் காண்போம். வதி > வசி என்று திரிபுபெறவே, தமிழில் அதனை வதிதல் என்பதைப் போல அல்லாமல், வசித்தல் என்று விரித்தாளுகின்ற மரபும் தமிழில் ஏற்பட்டுவிட்டது.

      வசி என்பதை வாஸ் > வாஸம் என்று திரித்துக்கொண்டது வடமொழிவாணர்தம் இரவல் முறைமை. ‚நிவாஸ் என்று திருமகள் அமர்ந்த மார்பனாகிய திருமாலைக் குறிக்கும் சொல்லில் வாஸ் என்பதன் ஆட்சியை அறியலாம். ஆண்பால் வாஸ் என்றும் பெண்பால் வாஸினி என்றும் கூறப்படும். இதனைத் தமிழில் தேவையில்லாமல் இரவல் வாங்கி வாசன், வாசினி என்று எழுதுகின்றோம்.

அவ்வகையில், வாஸம் என்பது இருந்துவாழும் நிலையைக் குறிக்கிறது. சகவாஸம் (உடனிருத்தல்), சுகவாஸம் (இன்பமாக இருத்தல்), சுகவாஸி (இன்பமாக இருப்பவன்), ... போன்றவை இருத்தலின் நிலைமையைக் குறிப்பதைக் காண்க.

அஞ்ஞாதவாஸம் என்பது பிறர் யாரும் அறிந்துகொள்ளாத வகையில் உருமறைத்து இருந்து வாழ்வதாகும். அதனைத் தமிழில் கரந்துறைதல் (மறைந்துறைதல்), கரந்துறைவு (மறைந்துறைவு) என்பர். மலைவாழ்நர் என்று கூறாமல் மலைவாசி எனவும், குடிசைவாழ்நர் என்று கூறாமல் குடிவாசி எனவும் எழுதுகிறோம். இவை தேவையில்லாத வேலை.

இருப்பிடத்தை வாஸஸ்தலம் என்று மேலும் விரிவாக்கித் திரித்துள்ளமை அவர்களின் தேவைக்கேற்ப அமைந்த ஒன்றாகும்.

இதுவரையிலும், புறத்தில் தங்குதல்-தங்கியிருத்தல் பற்றிய கருத்துப் போக்கில்தான் மேலுள்ள சொற்களையெல்லாம் பார்த்தோம். இனி, சற்று உள்ளார்ந்த மெய்யியல் துறையில் இதே வேரிலிருந்து ஆழ்ந்து சென்றுள்ள சொற்களையும் ஒருசிறிது காண்போம்.

Vasana, belonging to an abode, fit for a dwelling, W.; n. causing to abide or dwell, Balar.; abiding, abode, L.; ...

Vasana, f. the impression of anything remaining unconciously in the mind, the present conciouness of the past perceptions, knowledge derived from memory, Samk.; ...

Vasas, n. lodging for the night, night-quarters, PrasnUp.

Vasi, m. abiding, dwelling, W.; ...

Vasin, mfn. staying,abiding, dwelling, living, inhabiting(often ifc, = living in or among or in a partic. Manner or condition), TS. &c, &c

Vasya, mfn. To be caused to dwell or settledown, VarBrS.

Vastu, n. (m. only in BhP.) the site or foundation of a house, site, ground, building or dwelling place, habitation, homestead, house, RV. &c. &c; an apartment, chamber, ... 
                                          Ref. SED - pg. 947 col. 3

      உயிர்தோறும் உள்ளுறைபவன் எனும் பொருள்கொண்ட வாசு [ vasu, m. (said to be fr. / 5. vas) N. of Vishnu (a dwelling in all beings)] என்னும் சொல் விண்ணு ஆகிய திருமாலைக் குறிக்கிறது. வாசுதேவன் என்னும் பெயர் அதன் நீட்டம் ஆகும்.

No comments:

Post a Comment