Saturday, July 13, 2013



    தமிழ்ஒரு முழுமை! முதல்மூலம்!


தமிழ்ஒரு முழுமை! முதல்மூலம்! – அயற்
                             சார்புகள் ஏதும் அதற்கில்லை!

தமிழ்ஒரு ஞால விரிவியன்மை! - அறியும்
                             அனைத்துத் துறைக்கும் அதுதலைமை!

தமிழ்ஒரு ஞான இறைஇயன்மை! - அகத்துத்
                             தவந்தரு ஞானம் அதன்வயன்மை!

தமிழ்தனை மறுத்தல் மறைத்தலெலாம் - நித்தம்
                             தமிழ்ப்பகை மனத்துக்(கு) இயல்பாகும்!



                   தமிழ்தான் உலகப் பொதுமரபு! - மூலத்
                             தமிழ்தான் உலகப் பொதுவுறவு!

                   தமிழ்தான் உலக இனமரபு! - நேயத்
                             தமிழ்தான் தமிழர் இனவுறவு!

                   தமிழ்தான் மூல வரலாறு! - ஆன்மத்
                             தமிழ்தான் காலப் பொருளாறு!

                   தமிழ்தான் தமிழர் வாழ்க்கைநெறி! - தூய
                             தமிழ்தான் தமிழர் உரிமைமுறி!



      இந்தியா என்ன? இந்தியென்ன? - காணும்
                இவையெலாம் தமிழின் திரிபாக்கம்!

      இந்து வியமும் மற்றுள்ள - எந்த
                இயமும் குமரித் தமிழ்மயக்கம்!

      விந்தியம் சிந்து லோத்தலவை - தமிழ்
                இயல்பினில் திரிந்து விரிந்தவையே!

      பிந்தியம் இவற்றின் பின்னால்போய் - மூலப்
                பெருந்தமிழ் தேடல் பேதைமையே!
                                            - இர. திருச்செல்வம்


No comments:

Post a Comment