Thursday, July 18, 2013



நாம் தமிழர்

  • வரலாற்றில் நாம் வாழ்ந்த வகையையும், வீழ்ந்த வகையையும் அறியாமல் இருப்பதுதான் நம் வீழ்ச்சிக்கெல்லாம் அடிப்படைக் காரணம்.
  • வரலாற்றில் தெளிவுபெற முடியாத – தெளிவு பெறாத எந்த இனமும் எழுச்சிபெற முடியாது!
  • வரலாற்றைப் படிக்காதவன், வரலாற்றைப் படைக்க முடியாது! வரலாற்றைப் படி! வரலாற்றைப் படை! வரலாறாகவே வாழு!
  • தமிழர் என இனவுணர்வு கொள்வதற்கு முன்பாக, தமிழர் என்னும் இனப்பெருமை கொள்ளப்பட வேண்டும்! ஏனெனில், இனப்பெருமையின் மீதுதான் இனவுணர்வு நிலைகொண்டு நிற்கும்.
  • நாம் தமிழர் என்ற பெருமையும், நாம் தமிழர் என்கின்ற திமிரும் ஒவ்வொரு தமிழனிடமும் நிலைகொள்ள வேண்டும்.
  • 50,000 ஆண்டுக்கு முற்பட மூத்த தமிழர் என்ற தேசிய இனத்தின் விடுதலை மொழி விடுதலையாக எழுந்து இனவிடுதலையாக நிமிர்ந்து தேச விடுதலையாக மலரவேண்டும்!
  • அவ்வகையில் தொடங்கிவிட்டது ஈழவிடுதலை! அது ஈழத் தமிழருக்கு மட்டுமான விடுதலையன்று1 அது உலகத்தில் 130 நாடுகளில் பரந்து விரிந்துகிடக்கின்ற 12 கோடி தமிழருக்கும் உரிய விடுதலை.
  • உலகம் எங்கும் உள்ள தமிழர் ஒவ்வொருவரையும் உள்ளிட்டு இருப்பதும் இயங்குவதும்தான் தமிழ்த் தேசியம். அது வெறுமனே ஈழம், தமிழகம் என்றுள்ள இடங்களை மட்டும் தழுவியிருக்கின்ற ஒன்றன்று.
  • வென்றாக வேண்டும் தமிழ்; அதற்கு ஒன்றாக வேண்டும் தமிழர்.
  • தமிழரெல்லாரும் தமிழர் என்ற உண்மை அடையாளத்தை ஏற்றுத் தெளிந்து செயல்காணுகின்ற வரலாற்றுப் பெருமாற்றம் ஒன்று உலகமெங்கும் நிகழ்ந்து கொண்டிருக்கிறது.
  • நம்மைப் பார்த்து இனவெறியன் – மொழிவெறியன் என்பவனெல்லாம் அவனவனுக்கும் வேராக இருக்கின்ற மொழியினத்தின் பேரால் வெறியனாக இருக்கின்றான்!
  • அரிசியில் கல்லைக் கண்டால் எடுத்து எறிகின்ற தமிழரின் கரம்; பாலில் நீர் கலந்திருக்கக் கண்டாலும் – எண்ணெயில் நீர் கலந்திருக்கக் கண்டாலும் அவற்றை வாங்க மறுக்கின்ற தமிழர் அறிவு, எதிலும் கலப்படத்தை விரும்பாமல் தூயதன்மையை விரும்புகின்ற தமிழர் மனம் தாய்த்தமிழ் மொழியில் மட்டும் ஆங்கிலமும் பிறபிற மொழியும் எனக் கலப்படங்களைச் செய்வது எதற்கு? ஏன்?
  • தமிழா உன் தாய்மொழியை நீ பேசாமல் வேறு எந்த நாய் பேசும்?
  • மதங்கள் நம் அடையாளம் அல்ல, சாதிகள் நம் அடையாளம் அல்ல. நாம் இந்து அல்ல, முசுலீம் அல்ல, கிறித்துவர் அல்ல. நாம் செட்டியார் அல்ல, முதலியார் அல்ல, நாடார் அல்ல, பிள்ளை அல்ல, கவுண்டர் அல்ல, பள்ளர் அல்ல, பறையர் அல்ல, என் மக்களே நாம் தமிழர்! நாம் தமிழர்! நாம் தமிழர்! சாதியும் மதமுமாக நாம் பிரிந்துபோய்ப் பிறரையெல்லாம் நம்மை ஆளவிட்டதெல்லாம் போதும்! போதும்!
  • தமிழராய் வாழ்வோம்! தமிழராய் ஆள்வோம்! தமிழராய் வெல்வோம்!

No comments:

Post a Comment