Saturday, July 13, 2013


வடக்கே போனவர்கள்
நிலைமாறிப் போனார்கள்
அவர்களின் மொழியும் நிலைமாறிப் போனது!

வடக்கே விந்தியம், உலோத்தல், சிந்து எனப் பலவிடங்களுக்கும் போனவர்கள் – அங்கும் தங்கள் முன்னோர்வழி சார்ந்த குமரி நாட்டு நாகரிகத்தைக் கடைப்பிடித்து இருந்தவர்கள், போகப் போகத் தம் குமரிநாட்டு முன்னோர் மரபுகளில் மெல்லமெல்ல நிலைமாறிப் போனார்கள் என்பதால்தான், அவர்களின் மொழியும் நிலைமாறிப் போனது. அதற்கேற்ப வேறாகத் தமக்கும் தம் மொழிக்கும் புதியதொரு பெயரையும் வைத்துக்கொள்ள நேர்ந்திருக்கிறது.

எனவே, அந்த நிலைமாறலுக்கு ஏற்ப, அவர்களின் எழுத்திலும் மாற்றங்கள் ஏற்பட்டிருந்தன. எனினும், அவற்றை ஏற்க வேண்டிய தேவை ஏதும் நமக்கு அதாவது தென்னகம்வாழ் மூலத் தமிழருக்கு இல்லை என்பதால்தான், தொல்காப்பியர் அவ்வெழுத்துகளைத் தமிழில் சேர்க்கக்கூடாது; நீக்க வேண்டும் என்று ஆணை பிறப்பித்தார்.

அந்த முத்தமிழ் ஆணையைப் பிறப்பிக்கும் போது அவர்க்கு இருந்த மனநிலை என்ன தெரியுமா? பார்வை என்ன தெரியுமா? தமிழ்மொழிதான் வேங்கடத்துக்கு அப்பால் வேறுபட்டுவிட்ட அத்தனை மொழிகளுக்கும் மூலமுதல்; தமிழின் கடுஞ்சிதைவும் கடுந்திரிபுமே அந்தப் பிரிந்துவிட்டப் பிற மொழிகள் என்பதே தொல்காப்பியர்க்கு இருந்த மனநிலைத் தெளிவு, அறிவுத் தெளிவு, நெட்டநெடிய வரலாற்று வான்பார்வை விரிவு.

இந்த ஆணையைச் சரியாக உள்வாங்கி உணர்ந்து புரிந்துகொண்டு தொடர்ந்து கடைப்பிடித்த வரைக்கும் தமிழின் மரபுநிலையில் எந்தப் பாதிப்பும் ஏற்படவில்லை. முத்தமிழ் மரபும் முக்கழக மரபும் அதன்படியே தடந்தப்பாமல் நடந்துவந்த செம்மையினாலும் தூய்மையினாலும் தமிழின் எழுத்தும் சொல்லும் பொருளும் நிலைகெட்டு விடாமல் திடம்பட்டுத் தெளிந்து விளங்கின.

எல்லாத் துறைசார்ந்த தெரிவியல் (theory), புரிவியல் (practical) எனப்பட்ட எல்லாக் கலைமுறை – தொழில்முறை நடவடிக்கைகளும் தூய தமிழையே அடிமுதலாக வைத்து அருமையாக இயங்கி வந்துள்ளன. அவற்றில், ஆரியச் சார்பு – முட்டுக்கொடுப்புகள் ஏதும் இல்லை.

ஆரிய மயமாக்கம் அல்லது சமற்கிருத மயமாக்கம் என்பது பிற்கால நிலைகளாகும். இதுகுறித்துப் பேரா. இராம. பெரியகருப்பன் என்னும் தமிழண்ணல் அவர்கள் தொகுத்தளித்திருக்கும் ‘சமற்கிருத மயமாக்கம்’ என்னும் நூலில் விரிவாக காண்க.

முதற்கட்டத்து வடமொழியும்
அதற்கு அடுத்தக் கட்டத்து வடமொழியும்

மேலே சொன்னவாறு, காலவோட்டத்தில், குமரிநாடு முற்றும் மூழ்கியொழிந்த பின்னர், மொழி வழக்கினைக் கொண்டே தென்மொழி – வடமொழி என எஞ்சியிருந்த நாவலந்தேயப் பகுதி முழுவதையும் இரண்டாகப் பிரித்துச் சுட்டினர். இந்த முதற்கட்டத்து வடமொழி என்பது பிராகிருதம், பாலி, சூரசேனி, மாகதி முதலியவற்றை ஒருங்கே பொதுபடக் குறித்தது.

அதற்கும் பின்னரே, அங்கே ஏற்பட்ட ஆரிய இனக்கலப்பால், மேலும் திரிபாக்கம் பெற்ற நிலையில் உருவான அரைச்செயற்கை இலக்கியக் கலவை மொழியான (Semi Artificial Literary Dialect) சமற்கிருதத்தையும் அது சேர்த்துக் குறித்துள்ளது. இந்த அடிப்படையில்தான், ஒரு வரலாற்றுப் பின்னணியோடு வடசொல் - வடவெழுத்து என்னும் சொல்லாட்சிகள் தொல்காப்பியத்தில் இடம்பெற்றுப் பொருள்குறித்து நிற்கின்றன. அது வெறுமனே சமற்கிருத மொழியை மட்டும் குறித்து நிற்கவில்லை என்பதை நன்றாக அறிய வேண்டும் - தெளிய வேண்டும்.

பாலி (Pali) – பாகதம் (Prakrit) – சங்கதம் (Sanskrit) என்ற பெயரில்  இவற்றைத் திருமுறையாசிரியன்மார் குறிப்பாக, அப்பர் – சம்பந்தர் – சுந்தரர் ஆகிய மூவர் முதலிகள் காலம் வரையில் தெளிவாக அறிய முடிகின்றது.

அவர்களுக்குப் பிறகு, புத்த மதத்தோடு தொற்றித் திரிந்த பாலியும், சமண மதத்தோடு பற்றித் திரிந்த பாகதமும், அவ்விரண்டு மதங்களின் வீழ்ச்சிக்குப் பின்னர் தமிழகத்திலே அடியோடு ஆளுமையற்றுப் போயின. எஞ்சியிருந்தலவற்றின் சில வழக்குகளும் தென்னகத்தில் தொடர்ச்சிபெற்று வந்த ஆரியத்துக்குள் முற்றுமாக இரண்டற அடங்கிவிட்டன. அவ்விரண்டுக்கும் பிறகு, ஒற்றைப் பேராட்சியாகச் சமற்கிருதம் ஒன்று மட்டுமே முற்றிலும் வடமொழி என்ற பெயர் மரபோடு நிலைபெற்றுவிட்டது. அதன்வழியாக வடமொழி என்பதன் ஒட்டுமொத்தமாக ஒரே வடிவமாகத் தன்னைக் காட்டிக்கொண்டுள்ளது.

இந்த இடம் – இந்த வரலாற்றுத் தடம் மிகப்பல வரலாற்று ஆசிரியர்களுக்கு அவர்களின் நெடிய ஆராய்ச்சியின் இறுதியில்தான் அறியவந்துள்ளது. ஆரியக் கோட்பாட்டின் ஆணிவேராக – ஆரிய அறிவியத்தின் மணிமகுடமாக ஐரோப்பிய அறிஞர் பெருமக்களால் முதலில் நம்பப்பட்டுப் பின்னர் கைநெகிழ்க்கப்பட்டுள்ள கொள்கைத்திருத்த அறிவிப்புகள் இந்த உண்மையை தெளிவாக்கிவிட்டன. இவ்வகையில் வடமொழி வெறியராக இருந்து அந் நிலையிலிருந்து விடுபட்டு வந்தவர்களுள் குறிப்பிடத்தக்கவர்களுள் செருமானிய நாட்டைச் சேர்ந்த உலக மொழியாராய்ச்சிப் பேரறிஞர் மாக்சு முல்லர் அவர்கள் தலைமையானவர்.

மூன்று காலத்திலும்
முட்டறுத்து வளர்ந்திருக்கின்றது

தொடர்ந்து, மேற்சொன்ன இந்த ஐந்து மொழிகளுக்கும் மீமுன்னதாகத் தொல்பழந்தமிழும் தொல்தமிழ் மரபியமும் நாகரிமுள்ள நாவலம் (பண்டைய இந்தியா) ழுழுவதும், மொழியும் வாழ்க்கை நெறியுமாக நெடுங்காலமாக இருந்து வந்துள்ளன. இதனை, மதுரைச் சொக்கநாத பெருமான் மீது பாடப்பட்டுள்ள தமிழ்விடு தூது நூலின் ஆசிரியபிரானர்,
     
ÓýÉ¢Õó¾ À¡Ä¢ ¦Á¡Æ¢Ôí¸£÷ Å¡½Óõ
ÐýÛõ ¸Õô¨À¢§Ä §¾¡öžüÌ - ÓýɧÃ
Àñ¨¼ì¸¡ Äò§¾ ÀèŦ¸¡ñ¼ ÓýëÆ¢
Áñ¼Äò¾¢ §Ä§À÷ ÅÇ¿¡ðÊý - Áñο£÷ô
§Àáü ÈÕ¸¢ü À¢ÈíÌ Á½¢Á¨Ä¢ø
º£Ã¡üÚõ ¦ºí§¸¡ý ¾¢Èü¦ºí§¸¡ø - §¿Ã¡üÚõ
§ÀèÅ¢ §Äáü ¦ÀÕÁì¸û Ýúó§¾ò¾ô
À¡ÃÃÍ ¦ºö¾¾Á¢úô ¨Àó§¾வீ
                                        - ¾Á¢úŢΠàÐ

என்று வரலாற்றுமுறை பிறழாமல் பதிவுசெய்துள்ளார்.

பிற்காலத்திலே, தமிழிலிருந்து திரிபுற்றுக் கிளைத்து வளர்ந்து நின்ற இந்த ஐந்து மொழிகளோடும் தமிழும் தமிழ்மரபியமும் எந்த ஒரு வேறுபாடும் இன்றி, கைசேர்த்தும் கருத்து கோர்த்தும் நடந்துள்ளன.

அவற்றின் தனித்தன்மையான திரிபு வடிவத்தினைத் தமிழர் உணர்ந்துகொண்டு பொதுநிலையான மற்ற நிலைகளில் ஏற்கனவே இருந்த வந்த பழைய உறவினைப் பேணிவந்தனர். ஆனால், வாழ்க்கை மரபு நிலைகளில் அவர்களுக்குப் பின்னால் வால்பிடித்துப் போகவில்லை, தம் மூலத்தமிழ மரபியல் தலைமையை இழக்கவில்லை. இந்த நிலை மூன்றாம் தமிழ்க்கழக்க் காலம் வரையில் ஒருவாறு தாக்குப்பிடித்து இருந்துள்ளது.

அவ் ஐந்துமே நிலைதிரிந்து அழிந்துபட்டப் பிற்பட்டக் காலத்திலும் கூட, மக்கள் வழக்கிலும் இலக்கிய வழக்கிலும் அறுபடாமல் தமிழும் தமிழ்மரபியமும் தொடர்ந்து தனித்து நின்று; என்றுமுள்ள தொன்மையும், நின்றுவெல்லும் தொடர்ச்சியும் கொண்டனவாக விளங்கியிருந்து வந்தன - வருகின்றன.

இதனைத்தான், ‘ஆரியம் போல் உலகவழக்கு அழிந்து ஒழிந்து சிதையாத சீரிளமைத் திறம்’ உடைய மொழி தமிழ்மொழி என்று பேரா. சுந்தரனார்தம் திருப்பாட்டு வெற்றிப் பெருமிதச் சங்கெடுத்து முழங்குகின்றது – நம் கைமேல் வழங்குகின்றது.

இம்மட்டுத் தானா? இல்லை, இல்லை. அவரே தமிழ மூல மரபியத்தைப் புதிய மேலை நாட்டு ஆய்வியல் பாணியில் வைத்து ஆராய்ந்து பார்த்து; ஆரிய மரபியத்திலிருந்து வேறுபிரித்தும் அப்போதே காட்டிவிட்டார்.

தம் ஆன்மிகப் பணிகளில் தம்மோடு இணைந்து செயல்படுமாறு அழைப்பு விடுத்த (ஆரிய நூல்வழித் தலைமையின்கீழ் இயங்கினாலும் பொதுமையுடையவராக இருந்த) விவேகானந்தருக்கும் இவ்வுண்மையினை பேரா. சுந்தரனார் உணர்த்தியுள்ளார். அதன் வெளிப்பாடாகவே, தமிழினத்தைப் பற்றிய உயர்ந்த கருத்து ஒன்றை எல்லார்க்கும் நடுவாக விவேகானந்தர் வெளிப்படுத்தினார். அது மிகுந்த வரலாற்று முகாமை உடையது; எல்லாரையும் நடுப்படுத்தும் வல்லமை உடையது. இதற்குக் காரணமானவர் பேரா. சுந்தரனார் அவர்களே! இதனை விவேகானந்தரின் கருத்துக் களஞ்சியமான ஞான தீபம் எனும் நூல்வரிசையில் காணலாம். [காண்க: Quatations on Tamil and Tamil Culture L Prof. Dr. Ira. Madhivanan]

தொடர்ந்து, அப் பெருமானார் “சதுமறை ஆரியம் வருமுன் சகமுழுதும் நினதாயின், முதுமொழிநீ அனாதியென மொழிகுவதும் வியப்பாமே!” என்று வியப்புக்குமேல் வியப்பு மேலெழுந்து வருவதை உளங்கொள்ள முடியாமல் பேரின்பப் பெருவிம்மிதம் கொள்கிறார். நம் அந்தமில் செந்திறத்துச் சுந்தரப் பெருதகையார்தம் இந்த ‘விம்மிதப் பெருக்கு’ என்பது அவர்க்கு மட்டுந்தானா வந்தது? நமக்கும் அப்படியே வருகிறதே! ஏன் தெரியுமா? உருவத்தினால் மட்டுமன்று உள்ளத்தினாலும் ஒழுக்கத்தினாலும் நாம் தமிழராகவே இருப்பதுதான் – இருக்க விரும்புவதுதான் காரணம்.

சுந்தரனார் என்ன சொல்கிறார் தெரியுமா? தமிழ்மரபியம் என்பது சதுர்வேதம் எனப்படுகின்ற ஆரியச் சுதுர்வேத (ஆரிய நான்மறை) மரபினுக்கும் மூத்த மீமுது தொன்மை உடையது என்பதாக மட்டுமின்றி, அதற்கும் மேற்சென்று பார்க்கையில் இந்த உலகம் முழுவதுமே கூட தமிழ்வழியது என்பதாக ஒரு வியன்பேருண்மையும் அறியவரும் போது, அஃது அவருக்குத் தமிழை இன்னும் இந்தியா என்னும் சின்ன எல்லைக்குள் வைத்து – எல்லைப்படுத்திப் பார்க்க முடியாத மனவிரிவினையும் விம்மிதத்தையும் ஒருங்கே தருகின்றது.

அந்த நிலையிலே, தமிழ் என்பது இந்திய வியன்மை உடையதாக மட்டுமில்லை, மாறாக அதையுங் கடந்து ஓர் உலகளாவிய வியன்மை – வயன்மை – இயன்மை உடைய மொழி என மேலும் அறியவரும் நிலையிலே, அவரால் தமிழை முதுமொழி என்பதாக மட்டும் கூற முடியவில்லை. அதற்கும் மேற்சென்று; அனாதி [அன் + ஆதி > அனாதி] என்று மொழிகுவது (ஐயந்திரிபு அற முதல்மூலம் எனக் கூறுவது) என்பது மாபெரிய வியப்பினுக்கும் வியப்பாகி விரிந்துவிரிந்து மேற்செல்லுகின்ற பன்மாண் வான்வியப்பபினை ஆன்மத்துள் அளிப்பது என்கிறார்.

என்ன!!! அவருடைய சிந்தனை வேகத்துக்கு உங்களால் ஈடுதர முடிகிறதா? இந்தத் தெளிவே பண்டுபோல் தமிழரை அவர்களின் முன்னோர் வழியில் தடம்பார்த்துத் திடமாகச் செல்வதற்கு உரிய ஒரே நேர்வழியையும் வழங்குகின்றது - வழங்கியது. பேரா. சுந்தரனார் அதற்கு வாயிலாக விளங்குகின்றார்.  

புதிய மேலைமுறை ஆய்வியல் நெறிகொண்ட தமிழப்பேரறிஞர்களுள் முதல்மகன் எனத்தக்கவர் பேரா. பெ. சுந்தரனார் அவர்களேயாவர்! ஒடுக்கமுற்றுப் போன சுருக்க நிலையிலிருந்து எல்லையறியாத வியன்மையுடைய விரிநிலைக்கு மீட்டளித்த முதல் தமிழ்மீட்பறிஞர் பேரா. பெ. சுந்தரப் பெருந்தகையே!
 


No comments:

Post a Comment